தீபாவளி மலர் 2018: அமுதசுரபி - பக். 300; ரூ.175. 

ஆன்மிகம், இலக்கிய ஆராய்ச்சி, பயண இலக்கியம் என்று பல்சுவைத் தொகுப்பாக வெளியாகியுள்ளது அமுதசுரபியின் தீபாவளிச் சிறப்பிதழ்.
தீபாவளி மலர் 2018: அமுதசுரபி - பக். 300; ரூ.175. 

ஆன்மிகம், இலக்கிய ஆராய்ச்சி, பயண இலக்கியம் என்று பல்சுவைத் தொகுப்பாக வெளியாகியுள்ளது அமுதசுரபியின் தீபாவளிச் சிறப்பிதழ்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றி சுவாமி கமலாத்மானந்தர் அற்புதமானதோர் ஆத்மிகச் சித்திரத்தை வடித்துள்ளார். பகவான் ராமகிருஷ்ணரின் ஆன்மிகப் பயிற்சிகள், அவரது பல்வேறு சமாதி அனுபவங்களை அதில் குறிப்பிடுகிறார். ராமகிருஷ்ணர் தனது ஆன்மிகப் பயிற்சிகளால் பல்வேறு இறை நிலைகளைத் தரிசித்தார். 
ஒரே இறைபொருளை பல்வேறு ஞானியர் வெவ்வேறு பெயர்களில் விளக்கினர் என்பதற்கும் மேலாக, எப்படி ராமகிருஷ்ணருக்கு பல்வேறு ரூபங்களில் இறை தரிசனம் கிடைத்தது என்று கட்டுரை விவரிக்கிறது. வேத வாக்கியத்தின் உண்மையைச் சொல்லும் விதமாக ராமகிருஷ்ணரின் அவதாரம் அமைந்துள்ளது எனக் கூறும் சுவாமி கமலாத்மானந்தரின் கட்டுரை இம்மலருக்கே மகுடமாக விளங்குகிறது. 
சிறுகதை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்திரா பார்த்தசாரதியின் "பிணைப்பு' ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட படைப்பு. 
திருப்பூர் கிருஷ்ணனின் "தேடி வந்தாள் திருமகள்' ஒரு பெüராணிகரின் லாகவத்தோடு எழுதப்பட்டுள்ளது. 
மொத்தத்தில் இனிமையும் நல்லெண்ணமும் நிறைந்திருக்கச் செய்யும் இதழ்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com