நூல் அரங்கம்

தீபாவளி மலர் 2018: அம்மன் தரிசனம் - பக்.252; ரூ.150.

DIN

வழக்கமான தீபாவளி மலர்களிலிருந்து வழக்கம் போல வேறுபடுகிறது, "அம்மன் தரிசனம்' தீபாவளி மலர்.
 எல்லா தீபாவளி மலர்களும் பல்சுவையாக, கதை, கட்டுரைகள், ஆன்மிகம், சிறுகதைகள், சினிமா என்று வெளிக்கொணரும்போது, அம்மன் தரிசனம் வித்தியாசமாக ஆன்மிகத்துக்கு மட்டுமே இடம் அளித்து வெளிக்கொணரப்படுகிறது என்பதுதான் தனி சிறப்பு. இந்த ஆண்டு தீபாவளி மலரும் அந்தக் கொள்கைக்கு விதிவிலக்கல்ல.
 சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி சங்கரசாரியாரியின் அனுக்ரஹ சந்தேசத்துடன் தொகுத்துத் தரப்பட்டியிருக்கும், அம்மன் தரிசனத்தின் முதல் கட்டுரையே பூஜ்ய ஸ்ரீ ஓங்காராநந்த சுவாமிகளின், "ஆதி சங்கரர்' காட்டும் அறிவொளி என்கிற கட்டுரை. "கம்பவாரிதி ' இலங்கை ஜெயராஜ், "சொல்வேந்தர்' சுகி சிவம் என்று இலக்கிய, ஆன்மிக ஆளுமைகளின் அணிவகுப்பே நடத்தப்படுகிறது.
 முழுக்க முழுக்க பக்தி மணம் கமழும் "அம்மன் தரிசனம்' தீபாவளி மலரை ஆன்மிக மலர் என்று குறிப்பிட்டாலும் தவறில்லை. அத்வைத சித்தாந்திகளுக்குப் பெரு விருந்து இந்த மலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT