புதன்கிழமை 14 நவம்பர் 2018

என்னை நான் சந்தித்தேன்

By ராஜேஷ்குமார்| DIN | Published: 03rd September 2018 01:32 AM

என்னை நான் சந்தித்தேன் - ராஜேஷ்குமார்; பக்.504; ரூ.390; அமராவதி, பு.எண்.12, ப.எண்.28, செளந்தரராஜன் தெரு, தியாகராயநகர், சென்னை-17.
நூலாசிரியர் ஓர் எழுத்தாளராக எப்படி பரிணாமம் அடைந்தார் என்பதை ஒரு விறுவிறுப்பான நாவலுக்கு இணையாக வாசிக்க வைக்கும் நூல். எழுத்துலகில் எதிர்நீச்சல் போட்டதை எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி நூலாசிரியர் சொல்லியிருப்பதால், யதார்த்தம், சுவாரசியத்துக்குக் குறைவில்லை.
க்ரைம் நாவலில் மட்டுமின்றி, சமூக நாவல்களும் எழுதி குவித்துள்ள நூலாசிரியர், தனக்கு நேர்ந்த அவமானங்களையும், வெகுமானங்களையும் அவருக்கே உரிய நடையில் தந்துள்ளார். 
குமுதம் எஸ்.ஏ.பி., ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன், சாவி, இதயம்பேசுகிறது மணியன் போன்ற எழுத்துலக ஜாம்பவான்களோடு நூலாசிரியரின் சந்திப்பு என சுவையான பல பகுதிகளுடன் நூலின் 24 அத்தியாயங்களும் வாசகர்களுக்கு அனுபவ விருந்து. 
எழுத்தாளனாவது எளிதல்ல; முயன்றால் முடியாததில்லை. குமுதம் வார இதழுக்கு 127 கதைகள் அனுப்பியும் பிரசுரமாகாது 128 ஆவது கதை பிரசுரமானது, மூன்று இதழ்களில் தேர்வாகாத சிறுகதை நான்காவதாக வேறு ஒரு வார இதழில் பிரசுரமாகி இலக்கியச் சிந்தனை பரிசும் பெற்றது போன்ற சம்பவங்கள் எழுத்தாளனாக வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு உத்வேகம் தரும். 
"எச்சரிக்கை இது கதை அல்ல' என்ற அறிவிப்புடன் "24 காரட் துரோகம்' என்ற தலைப்பில் 14 அத்தியாயங்களில் ஒரு தொகுப்பும் நூலின் பிற்பகுதியில் இடம் பெற்றுள்ளது. எழுத்தாளர்களுக்கு சினிமாதுறையினரிடம் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

More from the section

தீபாவளி மலர் 2018: சிவஒளி - பக்.178; ரூ.150.
தீபாவளி மலர் 2018: அம்மன் தரிசனம் - பக்.252; ரூ.150.
தீபாவளி மலர் 2018: ஸ்ரீ சாயி மார்க்கம் - பக்.104; ரூ. 100.
தீபாவளி மலர் 2018: விஜயபாரதம் - பக். 424; ரூ.100.
தீபாவளி மலர் 2018: கோபுர தரிசனம் - பக்.364; ரூ.150