புதன்கிழமை 21 நவம்பர் 2018

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

DIN | Published: 10th September 2018 01:00 AM

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்-உலக இதிகாசங்களில் குழந்தைகள்-ரோஹிணி சவுத்ரி; தமிழில்: சசிகலா பாபு; பக்.200; ரூ.200; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி; )04259 - 226012.
 உலக நாடுகளின் பாரம்பரியங்களை பறைசாற்றும் பல்வேறு புராணக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புதான் இந்நூல். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கதைகளின் நாயகர்களுமே சிறுவர்கள் என்பதுதான். இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள இளவரசர்களின் பாத்திரங்களை மட்டும் தனியாகத் தொகுத்து, அவற்றினூடே புராணங்களின் கருப்பொருள்கள் அலசப்பட்டிருக்கின்றன.
 இந்தியாவின் இணையற்ற இதிகாசமாகக் கருதப்படும் மகாபாரத்தை எடுத்துரைக்கும்போது கூட, பால்ய பருவ பாண்டவர்களின் கதையாகவே அது விரிகிறது. அதேபோன்று சித்தார்த்தன் புத்தராக புதுப்பிறவி எடுத்த வரலாறும் வேறு கோணத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 உலகின் புகழ்பெற்ற புராணப் பாத்திரங்களான ஹோரஸ், ரோமுலஸ், ஹெராகிள்ஸ், ரெமஸ் உள்ளிட்டோரின் கதைகளும் வித்தியாசமாகவும், அதேநேரத்தில் சுவாரஸ்யமாகவும் விவரிக்கப்பட்டுள்ளன.
 அதுமட்டுமன்றி, நாம் பெரிதும் அறிந்திராத பெர்சியாவின் (தற்போதைய ஈரான்) மூன்று இளவரசர்களான ருஸ்டம், சால், சவுரப், செல்டிக் நாயகன் குக்கோலன், டிராகனாக உருமாறும் சீனச் சிறுவன் வென் பெங் உள்ளிட்டோரது கதைகள் கவனம் ஈர்க்கின்றன.
 வழக்கமான கோணத்தில் எழுதப்படும் புராணங்களின் கதை சொல்லும் மரபில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான முறையில் எழுதப்பட்டுள்ள நூல்.

More from the section

இலக்கியச் சங்கமம்
அஷ்டாவக்ர மகாகீதை
பட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறு கதைகள்
போதி தர்மா (4 பாகங்கள்)
வைகைக் கதைகள்