நூல் அரங்கம்

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்

DIN

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும் - சாரா காம்பிள், டோரில் மோய்; தமிழில்: ராஜ் கெளதமன் ; பக்.108; ரூ.90 ; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044- 2625 1968.
 பெண்ணியம் பற்றி வெளிவந்த இரண்டு நூல்களின் தொகுப்பே இந்நூல். சாரா காம்பிள் பதிப்பாசிரியராக இருந்து உருவாக்கிய "பெண்ணியமும் பின்னையப் பெண்ணியமும்' என்ற நூலும், டோரில் மோய் எழுதிய "பாலியல்/ பிரதியியல் அரசியல்: பெண்ணிய இலக்கிய கோட்பாடு' என்ற நூலும் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளை நம் முன் வைக்கிறது.
 ஐரோப்பியச் சூழலில் தோன்றிய பெண்ணியம் பற்றிய சிந்தனைகளாக இவை இருந்தாலும், நமது நாட்டுக்கும் பொருந்தக் கூடிய பல தன்மைகள் அவற்றில் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி.1550 - 1700 காலகட்டத்தில்தான் பெண்ணிய சிந்தனைகள் உருவாக ஆரம்பித்தன. அப்போது பெண்கள் சொத்துரிமை அற்றவர்களாக, ஆணின் உடமையாக இருந்திருக்கிறார்கள். ஆணை விட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்தை - மனப்பான்மையை எதிர்ப்பதாக அக்காலத்திய பெண்ணியம் இருந்திருக்கிறது.
 பெண்கள் ஆலைகளில் வேலை செய்வதற்குச் சென்ற பிறகு, முழுக்க முழுக்க ஆணைச் சார்ந்திருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. பல சட்டரீதியான உரிமைகள் கிடைத்தன. இங்கிலாந்தில் பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் உருவாகின. கல்வி அவர்களை சுயசார்பு உள்ளவர்களாக்கியது. இது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் புதுவிதமான பெண்ணியச் சிந்தனைகள் உருவாகக் காரணமாக இருந்தது. அப்படி உருவான பெண்ணியச் சிந்தனைகளிலும் பல மாறுபட்ட போக்குகள் தோன்றி வளர்ந்ததை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனட் கொலோட்னி, எலைன் ஷோவால்டர், மைரா ஜெஹ்லன், சிமோன் தெ பூவ, லக்கான், ஹெலன் சிக்ஷý, லூசி இரிகரே உட்பட பல பெண்ணியச் சிந்தனையாளர்களின் கோட்பாடுகளையும் இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT