இலக்கியச் சங்கமம்

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை, கோடைப் பண்பலை இணைந்து நடத்தும் மகாத்மா காந்தி 150 சிறப்புக் கருத்தரங்கம்.


காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை, கோடைப் பண்பலை இணைந்து நடத்தும் மகாத்மா காந்தி 150 சிறப்புக் கருத்தரங்கம். தலைமை: சு.நடராசன், வ.இராசரத்தினம், மா.வில்லியம் பாஸ்கரன்; பங்கேற்பு: பழ. அதியமான், க.மு.நடராஜன், மு.அப்துல் சமது, சுனில் கிருஷ்ணன், இரா.இரகுநாதன், தி.ரவிச்சந்திரன்;  இடம்: வெள்ளி விழா அரங்கம், கா.கி.நி.பல்கலைக்கழகம் ; 22.1.19; காலை10.00.


துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை, தமிழ் இலக்கியத்துறை மற்றும் தினமணி நாளிதழ் இணைந்து நடத்தும் "தமிழ்க் காப்பியங்களில் வாழ்வியல் போக்கு' எனும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம்.  தொடக்க விழா: காலை 9.00; தலைமை: முனைவர் இராம.கணேசன்; பங்கேற்போர்: ப.முருகன், அசோக்குமார் முந்த்ரா; கருத்தரங்க நூல் வெளியிட்டு, சிறப்புரை: டாக்டர் சுதா சேஷய்யன்; நூல் படிகளைப் பெற்று வாழ்த்துரை:  பேரா.ஒப்பிலா மதிவாணன்; பங்கேற்போர்: ப.அம்முதேவி, கு.சுதாகர்;  மதியம் 1.00 முதல் 4.45 வரை  மூன்று அமர்வுகள்; அமர்வுத் தலைவர்கள்: முனைவர்கள் ப.வேல்முருகன்,  ம.ஏ.கிருட்டிணகுமார், க.திலகவதி; மாலை 5.00 நிறைவு விழா:  சிறப்புரை: நீதியரசர் இராம.சுரேஷ்குமார்; கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கி, வாழ்த்துரை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்போர்: ஆ.இரமேஷ், சி.சதானந்தன்; இடம்:  துவாரகா அரங்கம், அரும்பாக்கம்,  24.1.19. 

சாகித்ய அகாதெமி மற்றும் இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இணைந்து நடத்தும் "மொழியும் இலக்கியமும்'- இலக்கிய அரங்கம். தலைமை: சுந்தர முருகன்; வாழ்த்துரை: சீ.மணிமேகலை, ர.வேணுகோபால்சாமி; பங்கேற்போர்: கு.கணேசன், சு.வேலாயுதன், ப.கமலக்கண்ணன்; இடம்: திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, இராசிபுரம்; 24.1.19; காலை 10.00. 

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் நடத்தும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு-4. தலைமை: சிலம்பொலி செல்லப்பனார்; பங்கேற்பு: சொ.பத்மநாபன், க.ஸ்ரீதரன், தமிழமுதன், மதுமிதா கோமதி நாயகம், இராம.குருமூர்த்தி, செ.வ.இராமாநுசன்; இடம்: தெற்கு துகார் கட்டடம், இந்துஸ்தான் சேம்பர், 5-ஆவது தளம், 149, கிரீம்ஸ், சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6; 25.1.19;  மாலை 5.00.

குடும்பவிளக்கு சாவித்திரி அம்மையார் அறக்கட்டளையின் எட்டாம் சொற்பொழிவு. தலைமை: சு.கணேசன்; பங்கேற்பு: பக்தவத்சல பாரதி, மன்னர்மன்னன், செல்வதுரை நீஸ் கோ.பாரதி, இரா.ஸ்ரீவித்யா, வே.பூங்குழலி பெருமாள், கு.தேன்மொழி; இடம்: தொல்காப்பியர் அரங்கு, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தொல்காப்பியர் முதன்மைச் சாலை, இலாசுப்பேட்டை, புதுச்சேரி; 25.1.19, காலை 10.15.

முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் திருவள்ளுவர் திருநாள் விழா.  பங்கேற்பு: கு.சிவமணி, ர. சந்தோஷ், இரா.காமேஷ்ராஜன், கா.மு.ஆதிகேசவன், ந.பாபு, சொர்ணபாரதி; இடம்:  மாக்கவி பாரதி நகர், 13ஆவது மையக் குறுக்குச்சாலை. சென்னை மாவட்ட முழு நேரக் கிளை நூலக வளாகம்;  25.1.19  மாலை 6.00. 

மதுரை திருவள்ளுவர் கழகம் நடத்தும் குறள்வேந்தர் மீ.கந்தசாமிப் புலவர் நினைவாக ஏழிளந்தமிழ் எழுத்துப் போட்டி(24ஆம் ஆண்டு). இடம்: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சிசுந்தரர் கோயில், மதுரை-1; 27.1.19, காலை 9.00.

திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு.  விளக்கவுரை நிகழ்த்துவோர்: மா.கி.இரமணன்; இடம்: ஸ்ரீபாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/13, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19; 27.1.19 காலை 10.00.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் இசைத் தமிழறிஞர் தொடர் வகுப்பு, 108ஆவது பொழிவு. நிகழ்த்துபவர்: முனைவர் சண்முக. செல்வகணபதி;  இடம்: வீரராகவ மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்; 27.1.19; மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com