நூல் அரங்கம்

கிருஷ்ணா... கிருஷ்ணா.!

பேரா.பி.மாரியப்பன்

"கிருஷ்ணா' என்று இந்த நூலின் பெயர் குறிப்பிடுவது கிருஷ்ணா நதியை. நதிகளின் தாய் என்ற பிரசித்தியைப் பெற்றது கிருஷ்ணா நதி. பிரம்மா, விஷ்ணு, சிவனின் அருள்பார்வையும் அம்சங்களையும் பெற்றவளாம் கிருஷ்ணா! ஒவ்வொரு நாளும் ஏராளமானவர்கள் தங்கள் பாபங்களை கங்கையில் நீராடிப் போக்குகின்றனர். அங்ஙனம் தன்னகத்தே படிந்த பாபங்களைப் போக்க, இரவில் காகமாக மாறி, கிருஷ்ணா நதிக்குப் பறந்து வந்து நீராடிச் செல்கிறாளாம் கங்கை! ஸ்கந்த புராணம் கூறும் இந்த வரலாற்றைப் போல மேலும் பல அற்புத தகவல்கள் நிறைந்துள்ளன.
"ஞானத்தின் உறைவிடம் வானமாமலை' என்னும் முதல் கட்டுரை அத்திருத்தலம் பற்றி மட்டுமல்லாமல், வானமாமலை ஸ்ரீமடம் வரலாறு, அதன் ஆச்சார்யர்கள் வரலாறு ஆகியவற்றைக் கூறுகிறது.
"வைணவத்தை வளர்க்கும் அஹோபிலம்' என்னும் கட்டுரை அஹோபில மடம் உருவான வரலாற்றையும் அதை ஸ்தாபித்த ஸ்ரீ ஆதிவண் சடகோப யதீந்திர மஹாதேசிகரின் வரலாற்றையும் அழகுறச் சொல்கிறது. 
தட்சிண காசி என்கிற ராமேசுவரம் - ராமநாத சுவாமி பற்றிய கட்டுரை பல திருத்தல ஐதிகங்கள், வழிபாட்டு முறைகள் பற்றி சுவையான தகவல்களைக் கொண்டிருக்கிறது.
இசை, நாட்டியம் போன்ற நமது பாரம்பரிய கலைகள் அனைத்தும் ஆன்மிகத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ஹரிகதையும் அதில் ஒன்று. ஹரிகதை அல்லது ஹரிகதா காலúக்ஷபம் நிகழ்த்தும் பிரசித்தி பெற்ற வித்வான்கள் நிறைந்த காலம் போய், அந்தக் கலை ஏறக்குறைய இல்லையெனும் நிலைக்கு வந்துவிட்டது. பன்மொழி அறிவு, பல பண்டைய நூல்களையும் கற்று புராணக் கதைகளையும் வரலாறுகளையும் சொல்லும் திறன், இசைத் திறன் எல்லாம் வேண்டும் அதை நிகழ்த்தும் கலைஞருக்கு. அப்படிப்பட்ட அரிய கலைஞர்களில் ஒருவர் கல்யாணபுரம் ஆராவமுதன். அவருடனான உரையாடலும் இதில் இடம் பெற்றுள்ளது. ஹரிகதை குறித்த கட்டுரை நம்மை சிந்திக்க வைக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT