திருக்குறள் மூலமும் உரையும் (இருவர் உரை) உரை

திருக்குறள் மூலமும் உரையும் (இருவர் உரை) உரை: பரிமேலழகர்; தெளிவுரை: கீர்த்தி; பக். 432; ரூ.225;  அருணா பப்ளிகேஷன்ஸ், வில்லிவாக்கம், சென்னை-49; 044-26507131.
திருக்குறள் மூலமும் உரையும் (இருவர் உரை) உரை

திருக்குறள் மூலமும் உரையும் (இருவர் உரை) உரை: பரிமேலழகர்; தெளிவுரை: கீர்த்தி; பக். 432; ரூ.225;  அருணா பப்ளிகேஷன்ஸ், வில்லிவாக்கம், சென்னை-49; 044-26507131.
திருக்குறளுக்கு சமீப காலமாக எழுதப்பட்டு வரும் ஏராளமான உரை நூல்களுள் இதுவும் ஒன்று. ஆனால், சற்று வித்தியாசமானது. திருக்குறள் உரைகளிலேயே சிறந்ததான பரிமேலழகர் உரையை ஒவ்வொரு குறளுக்கும்  தந்து, அதன் கீழே தெளிவுரையை நூலாசிரியர் தந்திருக்கிறார். 
இனியவை கூறலில், "அகனமர்ந்து ஈதலின் (92)' என்கிற இரண்டாவது குறளுக்கு "நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; கண்டபொழுதே முகம் இனியனாய் அதனோடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின்' என்பது பரிமேலழகர் உரை. இதற்கு "மனம் விரும்பி ஒரு பொருளைக் கொடுப்பதைவிட முகம் மலர இனிய சொற்களைப் பேசுவது சிறந்தது' என்பது கீர்த்தியின் தெளிவுரை.
அதேபோன்று, வலி அறிதலில், "உளவரை தீக்காத ஒப்புரவு ஆண்மை (480)- தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால்; வளவரை வல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்' என்கிற 10ஆவது குறளுக்கான பரிமேலழகர் உரைக்கு,  "தன் பொருளின் அளவை எண்ணிப் பார்க்காமல், பிறர்க்கு உதவிக்கொண்டே இருப்பவனின் செல்வம் விரைவில் அழியும்' என்று தெளிவுரை எழுதியுள்ளார்.  அனைத்து குறள்களுக்கு இவ்வாறே எளிய தெளிவுரை தரப்பட்டுள்ளது. அரிய உரையுடன் கூடிய எளிய தெளிவுரை.
கிருஷ்ணா... கிருஷ்ணா!- ப்ரியன்; பக்.136;  ரூ.125; கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை17. 044-24342810.
இந்நூலாசிரியர் கடந்த முப்பதாண்டு காலம் பாரதத்தில் பல ஆன்மிக ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளார். பல ஆன்மிகச் சான்றோர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அந்த அனுபவங்கள் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க 18 கட்டுரைகள்தான் இந்தத் தொகுப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com