FIFA 2018

உலகக் கோப்பையில் பங்குபெற்ற ஒவ்வொரு அணிக்கும் கிடைத்த பரிசுத்தொகை எவ்வளவு? 

எழில்

2018 உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ. 260 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

இரண்டாம் இடம்பெற்ற குரோஷியா அணிக்கு ரூ. 192 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இது உங்களுக்குத் தெரிந்த தகவல்தான். எனில், போட்டியில் பங்கேற்ற மற்ற அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு என்பது உங்களுடைய கேள்வியாக இருந்திருந்தால் அதற்கான விடை இதோ:

இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகையாக ரூ. 2740 கோடியைச் செலவழித்துள்ளது சர்வதேச கால்பந்துச் சங்கமான ஃபிஃபா.

மூன்றாம் இடம் பெற்ற பெல்ஜியம் அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை - ரூ. 164 கோடி; நான்காம் இடம் பெற்ற இங்கிலாந்து அணிக்கு - ரூ. 151 கோடி.

இதுதவிர 5 முதல் 8 இடங்கள் வரை அடைந்த அணிகளுக்கு அதாவது காலிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகளுக்குத் தலா ரூ. 110 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 440 கோடி செலவாகியுள்ளது. 

9 முதல் 16 இடங்கள் வரை அடைந்த அணிகளுக்கு அதாவது காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை விளையாடிய அணிகளுக்குத் தலா ரூ. 82 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 656 கோடி செலவாகியுள்ளது.

17 முதல் 32 இடங்கள் வரை அடைந்த அணிகளுக்கு அதாவது முதல் சுற்றிலேயே வெளியேறிய 16 அணிகளுக்குத் தலா ரூ. 55 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 880 கோடி செலவாகியுள்ளது.

ஆக மொத்தம், போட்டியில் பங்கேற்ற 32 அணிகளுக்கான பரிசுத்தொகையாக ரூ. 2740 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 

பரிசுத்தொகை பட்டியல்

 ரூ. 260 கோடி - பிரான்ஸ்
 ரூ. 192 கோடி - குரோஷியா
ரூ. 164 கோடி - பெல்ஜியம்
ரூ. 151 கோடி - இங்கிலாந்து
ரூ. 110 கோடி - உருகுவே, பிரேஸில், ரஷியா, ஸ்வீடன் (காலிறுதி)
ரூ. 82 கோடி - போர்ச்சுகல், ஆர்ஜென்டீனா, மெக்ஸிகோ, ஜப்பான், ஸ்பெயின், டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, கொலம்பியா (காலிறுதிக்கு முந்தைய சுற்று)
ரூ. 55 கோடி - சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, துனிசியா, பனாமா, செனகல், போலந்து (முதல் சுற்றில் வெளியேறிய நாடுகள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT