தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவி பறிபோகவுள்ளதா?: கேகேஆர் பயிற்சியாளர் காலிஸ் பதில்!

2014-ல் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வென்று கோப்பையை வென்றோம். எனவே அதுபோன்ற...
தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவி பறிபோகவுள்ளதா?: கேகேஆர் பயிற்சியாளர் காலிஸ் பதில்!

இந்த வருட ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் நிலைமை திடீரென பரிதாபன நிலைமைக்குச் சென்றுவிட்டது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று அனைவரும் அச்சப்படும் அணியாக இருந்தது கொல்கத்தா அணி. ஆனால், கடைசி 5 ஆட்டங்களில் அந்த அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது. தினேஷ் கார்த்தின் தலைமைப் பண்பு சரியாக இல்லாததும் அந்த அணியின் சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. பேட்டிங்கிலும் அவர் சொதப்பி வருகிறார். 10 ஆட்டங்களில் ஒரு அரை சதம் உள்பட 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 119.38.

இதனால் ரஹானேவுக்கு நிகழ்ந்தது போல, தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவியும் பறிபோகவுள்ளதா என்கிற கேள்வி கேகேஆர் அணியின் பயிற்சியாளர் காலிஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: 

இல்லை. இதுகுறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. இந்த விவகாரம் அணிக்கூட்டத்தில் கொண்டுவரப்படவில்லை. அதைப் பற்றி எவ்வித பேச்சுவார்த்தையும் ஏற்படவில்லை. தினேஷ் கார்த்திக் விரைவில் நன்றாக விளையாடி ரன்கள் குவிப்பார் என நம்புகிறேன். அதனால் அணிக்கும் பெரிதளவில் பலனளிக்கும். அவரும் அதையே விரும்புவார். 2014-ல் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வென்று கோப்பையை வென்றோம். எனவே அதுபோன்ற ஓர் ஆட்டத்திறனை மீண்டும் வெளிப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com