ஒரு அணிக்கு எதிரான தொடர் வெற்றி: 2-ஆம் முறையாக இடம்பிடித்த சிஎஸ்கே!

ஒரு அணிக்கு எதிராக அதிக போட்டிகளில் தொடர் வெற்றிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனைப் படைத்துள்ளது. 
ஒரு அணிக்கு எதிரான தொடர் வெற்றி: 2-ஆம் முறையாக இடம்பிடித்த சிஎஸ்கே!

2019-ஆம் ஆண்டு நடைபெறும் 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் சனிக்கிழமை (ஏப்.23) தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 70 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து ஆடிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

இந்நிலையில், ஒரு அணிக்கு எதிராக அதிக போட்டிகளில் தொடர் வெற்றிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனைப் படைத்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் 2-ஆம் முறையாக சிஎஸ்கே இடம்பிடித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

(2015-18)* - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 8 முறை வென்றுள்ளது

(2011-15) - தில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 8 முறை வென்றுள்ளது

(2014-17) - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து 8 முறை வென்றுள்ளது

(2012-15) - தில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 7 முறை வென்றுள்ளது

(2013-2018) - தில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து 7 முறை வென்றுள்ளது

(2014-19)* - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 7 முறை வென்றுள்ளது

(* நடப்பு தொடர் உட்பட)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com