விராட் கோலி அபார சதம்: பிராட்மேன், கவாஸ்கர், சச்சினுக்கு அடுத்து சாதனை!

இப்போட்டியில் அபாரமாக ஆடி வந்த கேப்டன் விராட் கோலி, 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது சதமடித்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்த 25-ஆவது சதமாகும். 
விராட் கோலி அபார சதம்: பிராட்மேன், கவாஸ்கர், சச்சினுக்கு அடுத்து சாதனை!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 2-ஆவது நாளில் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இப்போட்டியில் அபாரமாக ஆடிய கேப்டன் விராட் கோலி, 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது சதமடித்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்த 25-ஆவது சதமாகும். மொத்தம் 257 பந்துகளைச் சந்தித்து 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரின் உதவியுடன் 123 ரன்கள் குவித்தார்.

இதனுடன் பிராட்மேன், கவாஸ்கர் மற்றும் சச்சின் ஆகியோருக்கு அடுத்து சாதனையும் படைத்தார். அதன் விவரம் பின்வருமாறு:

ஆஸ்திரேலிய மைதானங்களில் இங்கிலாந்து வீரர்கள் அல்லாத அதிக சதங்கள் (6) குவித்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

ஒரே சீசனில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக சதமடித்த முதல் ஆசிய வீரர் ஆனார் விராட் கோலி.

குறைந்த இன்னிங்ஸ்களில் 25 சதங்களைப் பதிவு செய்த பேட்ஸ்மேன்கள்:

  • டான் பிராட்மேன் - 68 இன்னிங்ஸ்
  • விராட் கோலி - 127 இன்னிங்ஸ்
  • சச்சின் டெண்டுல்கர் - 130 இன்னிங்ஸ்
  • சுனில் கவாஸ்கர் - 138 இன்னிங்ஸ்
  • மேத்யூ ஹைடன் - 139 இன்னிங்ஸ்
  • கேரி சோபர்ஸ் - 147 இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதமடித்த இந்திய வீரர்கள்:

  • சச்சின் டெண்டுல்கர் - 11 சதங்கள்
  • சுனில் கவாஸ்கர் - 8 சதங்கள்
  • விராட் கோலி - 7 சதங்கள்
  • விவிஎஸ்.லஷ்மண் - 6 சதங்கள்
  • கே.விஸ்வநாத், முரளி விஜய் - 4 சதங்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் விராட் கோலி குவித்த அதிகபட்ச மொத்த ரன்கள்:

  • 2018 - 1216* ரன்கள்
  • 2017 - 1059 ரன்கள்
  • 2016 - 1215 ரன்கள்
  • 2014 - 847 ரன்கள்

அதிக சதமடித்த கேப்டன்கள்:

  • க்ரீம் ஸ்மித் - 25 சதங்கள்
  • ரிக்கி பாண்டிங் - 19 சதங்கள்
  • விராட் கோலி - 18 சதங்கள்*
  • ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், ஸ்டீவ் ஸ்மித் - 15 சதங்கள்

விராட் கோலி ஆமைவேக சதமடித்த ஆட்டங்கள்:

  • இங்கிலாந்துக்கு எதிராக 2012-ஆம் ஆண்டு நாகபுரியில் - 289 பந்துகள்
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு பெர்தில் - 214 பந்துகள்
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2012-ஆம் ஆண்டு அடிலெய்டில் - 199 பந்துகள்
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு சென்னையில் - 199 பந்துகள்
  • இங்கிலாந்துக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு டிரெண்ட் பிரிட்ஜில் - 191 பந்துகள் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com