ஃபெடரரை வீழ்த்தி விம்பிள்டன் இறுதிவரை முன்னேறிய கெவின், டிவில்லியர்ஸிடம் வீழ்ந்த கதை தெரியுமா?

விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அனைவரின் கவனத்தையும் பெற்ற கெவின், ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.
ஃபெடரரை வீழ்த்தி விம்பிள்டன் இறுதிவரை முன்னேறிய கெவின், டிவில்லியர்ஸிடம் வீழ்ந்த கதை தெரியுமா?

விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அனைவரின் கவனத்தையும் பெற்ற கெவின், ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் பேட்டிங்கில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவரும், மிஸ்டர் 360 என்று அறியப்படுபவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டி வில்லியர்ஸ், சக நாட்டு டென்னிஸ் வீரர் கெவின் ஆண்டர்சனை டென்னிஸ் போட்டியில் வீழ்த்தியுள்ளார்.

விம்பிள்டன் தொடரில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 12-ஆம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சன் இறுதிப் போட்டி வரை முன்னேறி, அதில் நோவாக் ஜோகோவிச்சிடம் வீழ்ந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் 97 வருடங்களுக்குப் பிறகு விம்பிள்டன் இறுதிவரை முன்னேறிய தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

விம்பிள்டன் தொடரில் களத்தில் எளிதில் விட்டுக்கொடுக்காமல் மாரத்தான் ஆட்டத்தை வெளிப்படுத்தி, போராடி வெற்றிபெற்ற, அதுவும் முன்னணி வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்த கெவின் ஆண்டர்சனை, கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் வீழ்த்தியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

டி வில்லியர்ஸ், கிரிக்கெட் மட்டுமல்லாமல் இளம் வயதில் இதர விளையாட்டுகளிலும் அதிக கவனம் செலுத்தியவர். குறிப்பாக ரக்பி, டென்னிஸ், கோல்ஃப், he போன்ற விளையாட்டுகளில் ஜூனியர் பிரிவில் சிறப்பாக விளையாடியவர். பின்னாளில் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்தவர்.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டி வில்லியர்ஸிடம் தான் வீழ்ந்தது குறித்து கெவின் ஆண்டர்சன் கூறுகையில்,

தேசிய அளவிலான ஜூனியர் பிரிவில் ஏபி டி வில்லியர்ஸ், டென்னிஸ் விளையாட்டில் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்தவர். நான் அவரை விட 2 வயது இளையவன். நாங்கள் இருவரும் எப்போதுமே டென்னிஸ் விளையாடுவது வாடிக்கை. அதுபோன்ற ஒரு தருணத்தில் என்னை நேர் செட்களில் டி வில்லியர்ஸ் வீழ்த்தினார். அதில் நான் கடின சவால்களை அளித்து, சிறப்பாக செயல்பட்டாலும் அப்போட்டியில் அவர் வெற்றிபெற்றார். டென்னிஸ் களத்தை யூகித்து ஆடுவதில் டி வில்லியர்ஸ் வல்லவர். அதுபோல அவரின் பேக்ஹேண்ட் சர்வீஸ்கள் அற்புதமாக இருக்கும். ஒரு வழியாக அவர் முழுநேர கிரிக்கெட் வீரராக செயல்பட்டதில் எனக்கும் மகிழ்ச்சிதான் என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com