முதல் பந்து மாற்றத்தை கூட சந்திக்காத மே.இ.தீவுகள்: முதல் இன்னிங்ஸ் சாதனைகள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் எஸ்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் பந்து மாற்றத்தை கூட சந்திக்காத மே.இ.தீவுகள்: முதல் இன்னிங்ஸ் சாதனைகள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் எஸ்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகளுக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விராட் கோலி 139, பிருத்வி ஷா 134, ரவீந்திர ஜடேஜா 100* சதங்கள் குவித்தனர். ரிஷப் பண்ட் 92, புஜாரா 86 ரன்கள் சேர்த்தனர். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 53, கீமோ பால் 47 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 

இந்நிலையில், 468 ரன்கள் பின்தங்கிய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:

அதிகமுறை எதிரணிக்கு ஃபாலோ ஆன் வழங்கிய இந்திய கேப்டன்கள்:

  • முகமது அசாருதீன் - 7 முறை
  • விராட் கோலி - 5 முறை
  • சௌரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி - 4 முறை
  • சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் - 3 முறை

முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் மே.இ.தீவுகள் அணி பின்தங்கிய அதிகபட்ச ரன்கள்:

  • 563 v இங்கிலாந்து, கிங்ஸ்டன், 1930
  • 478 v இந்தியா, கொல்கத்தா, 2011
  • 468 v இந்தியா, ராஜ்கோட், 2018
  • 424 v இங்கிலாந்து, லீட்ஸ், 2007
  • 417 v தென் ஆப்பிரிக்கா, டர்பன், 2008
  • 401 v ஆஸ்திரேலியா, கிங்ஸ்டன், 1955

இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் கிடைத்த அதிகபட்ச லீட்கள்:

  • 492 v வங்கதேசம், மிர்பூர், 2007
  • 478 v மே.இ.தீவுகள், கொல்கத்தா, 2011
  • 468 v மே.இ.தீவுகள், ராஜ்கோட், 2018
  • 439 v இலங்கை, கொழும்பு எஸ்எஸ்சி, 2017
  • 413 v இலங்கை, கான்பூர், 2009

இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மே.இ.தீவுகள் அணி கடைசி 5 இன்னிங்ஸ்களில்:

  • 234 (78)
  • 168 (54.1)
  • 182 (55.2)
  • 187 (47)
  • 181 (48)

பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் 80 ஓவர்களைக் கடந்த நிலையில் மற்றொரு புதிய பந்து தேர்வு செய்து விளையாடப்படும். இந்நிலையில், மே.இ.தீவுகள் அணி இந்த 5 இன்னிங்ஸ்களிலும் அந்த 2-ஆவது புதுப்பந்தை சந்தித்தே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com