ஸ்பெஷல்

அன்று கோலி... இன்று புஜாரா... இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் மறக்க முடியாத இரண்டு இன்னிங்ஸ்

சுவாமிநாதன்

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் டெயிலண்டர்களை கொண்டு கோலி  சதம் அடித்தது போல் 4-ஆவது போட்டியில் புஜாரா சதம் அடித்துள்ளார். 

விராட் கோலி:

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்திய அணி ஒரு கட்டத்தில் 182 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்திய அணி 105 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 

அப்போது, விராட் கோலி 67 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை இங்கிலாந்து அணியின் ஸ்கோருக்கு அருகே கொண்டு செல்லும் முனைப்பில் கோலி விளையாடினார். ஒரு ஓவரில் குறைந்தபட்சம் 4 பந்துகள் முதல் 5 பந்துகளை அவர் எதிர்கொண்டு கடைசி பந்தில் 1 ரன் எடுத்து ஸ்டிரைக்கை தன்னிடமே வைத்துக்கொள்வார். இதனால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் நெருக்கடிக்கு உள்ளானார்கள். 

இப்படியே இஷாந்த் சர்மைவை வைத்து கோலி 9 ஓவர்களை கழித்தார். இந்நிலையில் இஷாந்த் சர்மா 17 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 9-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 35 ரன்கள் சேர்த்தது. இதில், விராட் கோலி மட்டுமே 30 ரன்கள் எடுத்தார். இஷாந்த் சர்மா ஆட்டமிழந்த போது கோலி 97 ரன்களில் இருந்தார். 

இதையடுத்து களமிறங்கிய உமேஷ் யாதவை வைத்துக் கொண்டு கோலி மீண்டும் ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் என்கிற அதே யுத்தியை கையாண்டு முதலில் சதம் அடித்தார். சதம் அடித்த பிறகு தொடர்ந்து ரன்கள் குவித்து வந்த கோலி 150 ரன்களை நெருங்கினார். அதேசமயம் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரையும் நெருங்கினார். 

ஆனால், அவர் 149 ரன்கள் எடுத்திருந்த போது ரஷீத் பந்தில் துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இதன்மூலம், இந்திய அணியால் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை கடந்து முன்னிலை பெற முடியவில்லை. இருப்பினும் இந்திய அணி வெறும் 13 ரன்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில் நல்ல நிலையை எட்டியது.  

கோலியின் இந்த ஆட்டம் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸாக அமைந்தது. 

புஜாரா:

4-ஆவது டெஸ்ட் போட்டியிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அதில், அந்த அணி 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 195 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து  51 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. அப்போது புஜாரா 78 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இந்நிலையில், இஷாந்த் சர்மா களமிறங்கினார். இதன்மூலம், டெயிலண்டர்களை வைத்து கோலி கையாண்ட அதே யுத்தியை இந்த போட்டியில் புஜாரா கையாண்டார். பெரும்பலான ஸ்டிரைக்கை தன்னிடமே வைத்துக் கொண்டு அவர் முதலில் சதத்தை நெருங்கினார். அவர், 96 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, பும்ரா களமிறங்கினார். அதன் பிறகு புஜாரா ஸ்டிரைக்கை சற்று துரிதமான ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதன்மூலம், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 15-ஆவது சதத்தை அடித்தார். 

சதம் அடித்த பிறகு, புஜாரா அவரது வழக்கமான பாணியில் இல்லாதவாறு ஒருநாள் கிரிக்கெட் போல் விளையாடி துரிதமான ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதன்மூலம், இந்திய அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட முன்னிலையே பெற்றது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலையில் 273 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த புஜாரா 132 ரன்கள் குவித்தார். இது புஜாரா கிரிக்கெட் வாழ்க்கையிலும் நிச்சயம் மறக்க முடியாத இன்னிங்ஸாக இருக்கும். 

இந்த 2 இன்னிங்ஸில் கோலியும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும்,  அதில் டெயிலண்டர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்றுவிடலாம் என்று எண்ணியிருந்த நேரத்தில் முதல் போட்டியில் கோலியும், 4-ஆவது போட்டியில் புஜாராவும் விளையாடியது அந்த அணியின் பந்துவீச்சாளர்களுக்கும் மறக்க முடியாத 2 முக்கியமான இன்னிங்ஸாக அமைந்தது. 

 மொத்தம்கோலிமொத்தம்புஜாரா
கடைசி 2 விக்கெட் பாட்னர்ஷிப்பில் எதிர்கொண்ட பந்துகள்1319814392
கடைசி 2 விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட ரன்கள்92827854

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT