ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கிறார் கோலி; புஜாரா, பும்ரா முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார் இந்திய கேப்டன் விராட் கோலி. அதே நேரத்தில் புஜாரா, பும்ரா ஆகியோர் முன்னேற்றம்
ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கிறார் கோலி; புஜாரா, பும்ரா முன்னேற்றம்


ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார் இந்திய கேப்டன் விராட் கோலி. அதே நேரத்தில் புஜாரா, பும்ரா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவரிசைப் பட்டியல் விவரம்:
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோலி 15 புள்ளிகள் சரிந்து, 920 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானுடன் டெஸ்ட் தொடரில் அதிரடியாக ஆடிய நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் 913 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மீத் 901 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கோலியை அடுத்து குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் கேன் வில்லியம்ஸன் உள்ள நிலையில், பெர்த் டெஸ்ட்டிலும் கோலி சரிவர ஆடா விட்டால், அவர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புஜாரா அபாரம்: அதே நேரத்தில் அடிலெய்ட் டெஸ்டில் 123, 71 ரன்களை குவித்த சேதேஸ்வர் புஜாரா 846 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 807 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் உள்ளார்.
பெளலர்கள்: பெளலர்கள் தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ரா 538 புள்ளிகளுடன் 33-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா,. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், தென்னாப்பிரிக்க வீரர் வெர்னான் பிலாண்டர், பாக். வீரர் முகமது அப்பாஸ், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் முதல் 6 இடங்களில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com