'கர்ஜித்த லயன்'- 283-க்கு கட்டுப்பட்ட இந்தியா

'கர்ஜித்த லயன்'- 283-க்கு கட்டுப்பட்ட இந்தியா

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்டத்தில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்தார். 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 2-ஆவது நாளில் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 70, டிராவிஸ் ஹெட் 58, ஆரோன் பிஞ்ச் 50 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்டத்தில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்த 25-ஆவது சதமாகும். அஜிங்க்ய ரஹானே 51 ரன்கள் சேர்த்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹாசில்வுட் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸி.யை விட இந்திய அணி 43 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com