டி20: மே.இ. தீவுகள் அணி அறிவிப்பு

வங்கதேசத்துக்கு எதிரான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

வங்கதேசத்துக்கு எதிரான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
கார்லோஸ் பிரத்வெயிட் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணிக்கு பேட்ஸ்மேன் எவின் லீவிஸ் திரும்பியுள்ளார். அவரோடு பந்துவீச்சாளர்கள் கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஷெல்டன் காட்ரெல் ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர். கிரண் பொல்லார்டு, ஒபெட் மெக்காய் ஆகியோர் காயம் காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அணி விவரம்: கார்லோஸ் பிரத்வெயிட் (கேப்டன்), டேரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மைர், ஃபாபியான் ஆலன், கெஸ்ரிக் வில்லியம்ஸ், கீமோ பால், காரி பியர், எவின் லீவிஸ், நிகோலஸ் பூரன், ரோவ்மென் பாவெல், தெனெஷ் ராம்தின், ஷாய் ஹோப், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஷெல்டன் காட்ரெல், ஒஷென் தாமஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com