இந்தியா சார்பாக போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ-க்குத் தடை விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு!

இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அமைப்பு தேர்வு செய்வதற்கு எதிப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது...
இந்தியா சார்பாக போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ-க்குத் தடை விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு!

இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அமைப்பு தேர்வு செய்வதற்கு எதிப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தில்லியைச் சேர்ந்த கீதாராணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுச் சங்கங்களை இந்திய அரசாங்கம் நிர்வகித்து வருகிறது. ஆனால் அரசின் அங்கீகாரமின்றி இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துவருகிறது. சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணி என்கிற பெயரில் போட்டியிட்டாலும் பிசிசிஐ என்பது ஓர் அரசு அமைப்பு அல்ல. இந்த அமைப்பு தமிழ்நாடு சங்கப் பதிவுச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படும்போது இந்தியா சார்பாகப் போட்டிகளில் கலந்துகொள்ள இந்திய அரசிடம் அனுமதி பெறவில்லை. எந்தவொரு அனுமதியின்றி இந்தியா சார்பாகப் போட்டிகளில் பங்கேற்கும் பிசிசிஐ அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து பதில் அளிக்க பிசிசிஐ மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com