செய்திகள்

உலகக்கோப்பையை வென்றது பிரான்ஸ்!

DIN

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 

உலகமே உற்று நோக்கி இருந்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரான்ஸ், குரோஷியா அணிகள் விளையாடின. போட்டி தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக சென்றது. போட்டியின் 19-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் மரியோ மாண்ட்ஸூகிக் பிரான்ஸ் அணிக்காக கோல் அடித்தார். பந்தை தலையில் தடுக்க முயல, அறியாமல் அது பிரான்ஸ் அணியின் கோலாக மாறியது. இதனால், பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை வகித்தது. 

பின்னர், அடுத்த 10-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெரிசிக் அந்த அணிக்காக அட்டகாசமான ஒரு கோல் போட்டி 1-1 என சமநிலை ஆனது. இதனால், போட்டியில் விறுவிறுப்பு அதிகரித்தது. அதன்பிறகு, பிரான்ஸ் அணிக்கு 36-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரான்ஸ் வீரர் கீர்ஸ்மேன் கோல் அடித்து அந்த அணியை 2-1 என முன்னிலைப் பெறச் செய்தார்.

அதன்பிறகு முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் மேலும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் பிரான்ஸ் அணி முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 

முதல் பாதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றதால் 2-ஆவது பாதி ஆட்டம் விறுவிறுப்புடன் தொடங்கியது. 60-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா கோல் அடிக்க அந்த அணி 3-1 என வலுவான முன்னிலை பெற்றது. இதனால், குரோஷிய அணி மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்தது. 

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள் 65-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் பாபி  மீண்டும் ஒரு கோல் அடித்து குரோஷியாவுக்கு மேலும் அதிர்ச்சியளித்தார். 65-ஆவது நிமிடத்தில் 4-1 என பின்தங்கியிருந்ததால் உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஏகதேசம் இழந்தது. 

இருப்பினும், விடாமுயற்சியோடு குரோஷிய வீரர்கள் போராடினர். அதற்கு பலனாக 69-ஆவது நிமிடத்தில் மரியோ மாண்ட்ஸூகிக் துல்லியமாக பிரான்ஸ் கோல் கீப்பரை ஏமாற்றி கோல் அடித்தார். இதன்மூலம் ஆறுதல் அடைந்த குரோஷிய அணி 2-4 என்ற நிலை அடைந்தது. 

அதன்பிறகு, இரு அணிகளும் மேற்கொண்டு கோல்கள் அடிக்கவில்லை. 

இதன்மூலம், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி 38 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாக பெறவுள்ளது. 

பிரான்ஸ் அணி இதற்கு முன் 1998-இல் பிரான்ஸில் நடைபெற்ற போது உலகக்கோப்பையை வென்றது. அதன்பிறகு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் அணி உலகக்கோப்பை பட்டத்தை வென்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT