டுட்டி பேட்ரியட்ஸ் அணி அபார வெற்றி

டுட்டி பேட்ரியட்ஸ்-விபி காஞ்சி வீரன்ஸ் அணிகள் இடையிலான டிஎன்பிஎல் 4-ஆவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை திருநெல்வேலியில் நடைபெற்றது.
டுட்டி பேட்ரியட்ஸ் அணி அபார வெற்றி

டுட்டி பேட்ரியட்ஸ்-விபி காஞ்சி வீரன்ஸ் அணிகள் இடையிலான டிஎன்பிஎல் 4-ஆவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை திருநெல்வேலியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற டுட்டி பேட்ரியட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து தொடக்க வீரர்களாக எஸ்.தினேஷ், கெளஷிக் காந்தி ஆகியோர் களமிறங்கி வலுவான துவக்கத்தை அளித்தனர். தினேஷ் 22, சுப்பிரமணியன் ஆனந்த் 37, ராஜகோபால் சதீஷ் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
3 சிக்ஸர், 13 பவுண்டரியுடன் 68 பந்துகளில் 111 ரன்களை எடுத்த கெளஷிக் காந்தி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 
இறுதியில் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு பேட்ரியட்ஸ் அணி 191 ரன்களை குவித்தது. காஞ்சி வீரன்ஸ் அணி தரப்பில் சுனில் சாம், சிலம்பரசன், சஞ்சய் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விபி காஞ்சி வீரன்ஸ் அணி சார்பில் விஷால் ஆதித்யா, சித்தார்த் ஆகியோர் களமிறங்கினர். 
ஆனால் பேட்ரியட்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் காஞ்சி அணியின விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது.
விஷால் ஆதித்யா 33, சித்தார்த் 0, பாபா அபரஜித் 29, முகிலேஷ் 2, சுப்பிரமணிய சிவா 33, சுரேஷ் லோகேஷ்வர் 3, சஞ்சய் யாதவ் 11, அருண் 4, சுனில்சாம் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆஷிக் சீனிவாஸ் 3, சிலம்பரசன் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து வெறும் 143 ரன்களை மட்டுமே வீரன்ஸ் அணி எடுத்தது. இறுதியில் டுட்டி பேட்ரியட்ஸ் அணி 48 ரன்களில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com