செய்திகள்

1-1: ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தெ.ஆ.

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டேவிட் வார்னர் 63 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 118.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் 126 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 3, ஹேஸில்வுட், மார்ஷ் தலா 2, ஸ்டார்க், லயன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 63 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் 39, டிம் பெய்ன் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ரபாடா இந்த இன்னிங்ஸிலும் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 45 ரன்களில் மிட்செல் மார்ஷ் ரபாடா பந்துவீச்சில் போல்ட் ஆனார். அடுத்ததாக கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோரையும் சொற்ப ரன்களில் வெளியேற்றினார் ரபாடா. லயன் விக்கெட்டை என்ஜிடி வீழ்த்த கடைசியாகக் களமிறங்கிய ஹேஸில்வுட் 17 ரன்கள் ரன்கள் எடுத்தார். பிறகு அவர் மஹாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தெ.ஆ. தரப்பில் ரபாடா 6 விக்கெட்டுகளையும் மஹாராஜ், என்ஜிடி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

முதல் டெஸ்டில் தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அணி, 2-வது டெஸ்டை வெற்றி பெற 101 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

மார்க்ரம் 21, எல்கர் 5, ஆம்லா 27, டி வில்லியர்ஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் தென் ஆப்பிரிக்க அணி 22.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து இந்த டெஸ்ட் போட்டியை வென்றது. டு பிளெஸ்ஸிஸ் 2, புருய்ன் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆஸ்திரேலியத் தரப்பில் லயன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். 

இரு அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் மார்ச் 22 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT