நியூஸிலாந்தைத் தோற்கடித்து டி20 கிரிக்கெட்டில் உலக சாதனைகள் நிகழ்த்தியுள்ள பாகிஸ்தான் அணி

தொடர்ச்சியாக 11 தடவை டி20 தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. இது ஓர் உலக சாதனை..
நியூஸிலாந்தைத் தோற்கடித்து டி20 கிரிக்கெட்டில் உலக சாதனைகள் நிகழ்த்தியுள்ள பாகிஸ்தான் அணி

பந்துவீச்சுக்கு நிகராக அல்லாமல் பேட்டிங்கில் அதிலும் சேஸிங்கில் பலவீனமான அணியாகக் கருதப்படும் பாகிஸ்தான் அணி தற்போது அருமையான பேட்ஸ்மேன்களின் வரவால் சேஸிங்கை எளிதாக எதிர்கொள்ளும் அணியாக மாறியுள்ளது. அதில் உலக சாதனை நிகழ்த்தும் அளவுக்கும் அதன் பேட்டிங்கின் பலம் பெருமைக்குரியதாக உள்ளது.

பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாட வருகின்றன. நேற்று, துபையில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தையும் வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. காலின் மன்றோவும்  கோரே ஆண்டர்சனும் தலா 44 ரன்கள் எடுத்தார்கள். கேப்டன் வில்லியம்சன் 37 ரன்கள் எடுத்தார். ஷஹீன் ஷா அப்ரிடி அற்புதமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த இலக்கை 19.4 ஓவர்களில் அடைந்து வெற்றி கண்டது பாகிஸ்தான் அணி. பாபர் அஸாம் 40 ரன்கள் எடுத்தார். ஆசிப் அலி 38, முகமது ஹஃபீஸ் 34 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்கள். 2-வது டி20 ஆட்டத்தையும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி. இதன்மூலம் சில உலக சாதனைகளையும் அந்த அணி நிகழ்த்தியுள்ளது. 

* இதன் மூலம் தொடர்ச்சியாக 11 தடவை டி20 தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. இது ஓர் உலக சாதனை.
* சேஸிங்கில் தொடர்ச்சியாக 11-வது முறையாக வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. இதுவும் ஓர் உலக சாதனை.
* டி20 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. 
* டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது பாகிஸ்தான் அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com