புதுச்சேரியில் முதன்முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி

புதுச்சேரியில் முதல்முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி திங்கள்கிழமை தொடங்கியது.
புதுச்சேரியில் முதன்முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி

புதுச்சேரியில் முதல்முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி திங்கள்கிழமை தொடங்கியது.
 ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பிளைட் பிரிவில் புதுவை, சிக்கிம், மிசோரம், மேகாலயா உள்ளிட்ட 9 அணிகள் மோதுகின்றன. இதில் புதுவை சி.ஏ.பி அணி }மேகாலயா அணி மோதும் டெஸ்ட் போட்டி துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை காலை தொடங்கியது. முதல்வர் நாராயணசாமி போட்டியை தொடக்கிவைத்தார்.
 தீப்பாய்ந்தான் எம்எல்ஏ முன்னிலை வகித்து அணி வீரர்களை வாழ்த்தினார். புதுவை அணியில் இடம்பெற்றுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் அபிஷேக் நாயரின் 100-ஆவது முதல் தரவரிசை டெஸ்ட் போட்டி இது என்பதால், முதல்வர் நாராயணசாமி அவருக்கு புதுவை அணிக்கான தொப்பியை அணிவித்து அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
 இதைத் தொடர்ந்து புதுவை-மேகாலயா அணிகள் மோதின.
 புதுச்சேரியில் நடைபெறும் ரஞ்சிக் கோப்பை போட்டி குறித்து பொறுப்பு செயலர் சந்திரன் கூறியதாவது:
 புதுவையில் முதன் முதலில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடை பெறுவது பெருமைக்குரிய விஷயமாகும். புதுவை அணிக்காக விளையாடும் அபிஷேக் நாயரின் 100-ஆவது முதல் தர வரிசை டெஸ்ட் போட்டி இதுவாகும். இதேபோல, பஞ்சாபைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் பங்கஜ்சிங் 600 விக்கெட்டுகளை எடுத்தவர். பரத்தோதாவும் சிறந்த வீரராவார். இவர்கள் 3 பேரும் புதுவை அணியில் இடம் பெற்றிருப்பது சிறப்பானது. புதுவை அணியின் கேப்டன் ரோகித் இதுவரை 80 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்றார்.
 டாஸ் வென்ற புதுவை சி.ஏ.பி. அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் நாராயணன் 8 ரன்னில் ரகான்சிங் பந்தில் போல்ட் ஆகியும், விக்னேஷ் 27 ரன்னில் அவுட் ஆகியும் வெளியேறினர். கேப்டன் ரோகித், டோக்ரா ஆகியோர் நிதானமாக விளையாடினர். டோக்ரா சதம் கடந்தார். 169 பந்தில் 101 ரன் எடுத்த அவர் சிங்ஹானியா பந்தில் புனித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
 இதைத் தொடர்ந்து கேப்டன் ரோகித்துடன் அபிஷேக் நாயர் ஜோடி சேர்ந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் கேப்டன் ரோகித் 61 ரன்களுடன் களத்தில் உள்ளார். புதுவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com