விடைபெறுகிறார் வேய்ன் ரூனி

இங்கிலாந்து கால்பந்து அணியின் பிரபல வீரர் வேய்ன் ரூனி வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள அமெரிக்கா உடனான நட்பு ஆட்டத்தில் இறுதியாக விளையாடுகிறார்.
விடைபெறுகிறார் வேய்ன் ரூனி


இங்கிலாந்து கால்பந்து அணியின் பிரபல வீரர் வேய்ன் ரூனி வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள அமெரிக்கா உடனான நட்பு ஆட்டத்தில் இறுதியாக விளையாடுகிறார்.
வெம்ப்ளி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டம் ரூனி இங்கிலாந்துக்காக ஆடும் 120 -ஆவது மற்றும் கடைசி ஆட்டமாகும். இதில் பங்கேற்க ஏதுவாக அமெரிக்காவின் டிசி யுனைடெட் அணி ரூனியை விடுவித்துள்ளது. ரூனி முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் பங்கேற்று ஆடினார்.
இதுதொடர்பாக ரூனி கூறியதாவது:
பழைய சக வீரர்கள், பயிற்சியாளர்கள், இங்கிலாந்து பயிற்சியாளர் காரேத் செளத்கேட் ஆகியோரை பார்க்க உள்ளது மகிழ்ச்சி தருகிறது. இங்கிலாந்து அணி சீருடையை மீண்டும் அணிவது பெருமை தருவதாகும். இங்கிலாந்து அணி சார்பில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரரான ரூனி அமெரிக்காவுக்கு இடம்மாறி அங்கு லீக் போட்டிகள் ஆடி வருகிறார்.
33 வயதான அவர் ஏற்கெனவே 119 ஆட்டங்களில் ஆடி 53 கோல்களை நாட்டுக்காக அடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு முதன்முதலாக இங்கிலாந்து அணியில் ஆடினார் ரூனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com