ஐபிஎல்: குறுஞ்செய்தி வாயிலாக விடுவிக்கப்பட்ட ஸ்டார்க்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்: குறுஞ்செய்தி வாயிலாக விடுவிக்கப்பட்ட ஸ்டார்க்


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விடுவிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவருக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாக அனுப்பியுள்ளது அந்த அணி நிர்வாகம்.
இதுகுறித்து ஸ்டார்க் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், கொல்கத்தா அணி உரிமையாளர்களிடம் இருந்து 2 நாள்களுக்கு முன்பு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், அணியிலிருந்து நான் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது என்றார்.
நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் ஸ்டார்க்கும் ஒருவர். கொல்கத்தா அணி அவரை ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. எனினும், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டார்க் சீசன் முழுவதுமாக விளையாடவில்லை.
இந்நிலையில், அவரை அணியிலிருந்து விடுவித்து கொல்கத்தா அணி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கு தகுந்த காரணம் தெரிவிக்கப்படாவிட்டாலும், அடுத்த சீசனுக்கு அவர் தயார் நிலையில் இருப்பாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஸ்டார்க்கிற்கு பதிலாக கொல்கத்தா அணியில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே, அடுத்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஸ்டார்க் அதில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத பட்சத்தில், மே மாதம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக எனது உடலுக்கு தகுந்த வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com