ஐபிஎல் அணிகளால் கழற்றி விடப்பட்ட பெரிய வீரர்கள்!

இதில் ஆச்சர்யமாக பிரபல வீரர்கள் சிலரும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்...
ஐபிஎல் அணிகளால் கழற்றி விடப்பட்ட பெரிய வீரர்கள்!

ஐபிஎல் போட்டி மார்ச் 29 முதல் மே 19 வரை நடைபெறும் என்று அறியப்படுகிறது. அணிகளில் வீரர்கள் விடுவித்தல், தக்க வைத்தல், பரிமாற்றத்துக்கு நவ. 15-ம் தேதி இறுதி நாளாக ஐபிஎல் அமைப்பு அறிவித்தது. இதையடுத்து தக்கவைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை அனைத்து ஐபிஎல் அணிகளும் நேற்று வெளியிட்டன. இதில் ஆச்சர்யமாக பிரபல வீரர்கள் சிலரும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.

அதிரடி வீரர்கள் மற்றும் டி20-க்கு உகந்த வீரர்கள் என அறியபட்ட ஷிகர் தவன், ஆரோன் ஃபிஞ்ச், குயிண்டன் டி காக், மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், கூரே ஆண்டர்சன், மிஸ்தாபிஸுர், டுமினி, கெளதம் கம்பீர், ஜேஸன் ராய், மேக்ஸ்வெல், ஷமி, விஜய் சங்கர், கிறிஸ் ஜார்டன், கார்லஸ் பிராத்வெயிட், அலெக்ஸ் ஹேல்ஸ், மிட்செல் ஸ்டார்க், டாம் கரன், அக்ஸர் படேல், யுவ்ராஜ் சிங், ஜயதேவ் உனாட்கட் போன்ற வீரர்களை அணிகள் நீக்கியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரபல மற்றும் டி20க்கு ஏற்ற வீரர்கள் மீண்டும் ஏலத்தில் பங்கேற்பார்கள். எனினும் ஷிகர் தவன், விஜய் சங்கர் உள்ளிட்ட சில வீரர்கள் வேறு அணிகளுக்கு மாறியுள்ளார்கள். 

ஸ்டாய்னிஸை பெங்களூரும் குயிண்ட் டி காக்கை மும்பையும் ஷிகர் தவனை தில்லியும் விஜய் சங்கர், ஷபாஸ் நதீமை ஹைதராபாத்தும் மந்தீப் சிங்கை பஞ்சாப்பும் இதர அணிகளிலிருந்து தேர்வு செய்துள்ளன. 

சென்னை சூப்பர் கிங்ஸ்

விடுவிக்கப்பட்டோர்: மார்க் வுட், கனிஷ்க் சேத், கிட்ஸ் சர்மா. 

மும்பை இந்தியன்ஸ் 

விடுவிக்கப்பட்டோர்: செளரவ் திவாரி, பிரதீப் சங்வான், மோஷின்கான், எம்டி, நிதீஷ், சரத் லம்பா, தஜிந்தர் சிங் தில்லான், டுமினி, பேட் கம்மின்ஸ், முஸ்தபிஸுர் ரஹ்மான், அகிலா தனஞ்செயா.

ராஜஸ்தான் ராயல்ஸ்

விடுவிக்கப்பட்டோர்: ஆர்சி ஷார்ட், பென் லாஹ்லின், ஹென்ரிச் கிளாஸன், டேன் பேட்டர்சன், ஜாகீர் கான், துஷ்மந்தா சமீரா, ஜெயதேவ் உனதிகட், அனுரீட் சிங், அங்கித் சர்மா, ஜதீன் சக்ஸனா.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

விடுவிக்கப்பட்டோர்: சச்சின் பேபி, தன்மய் அகர்வால், ரித்திமன் சாஹா, கிறிஸ் ஜோர்டன், கார்லோஸ் பிராத்வொயிட், அலெக்ஸ் ஹேல்ஸ், பிபுல் சர்மா, மெஹிதி ஹாசன். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

விடுவிக்கப்பட்டோர்: ஆரோன் பின்ச், அக்ஸர் பட்டேல், மொகித் சர்மா, யுவராஜ் சிங், பரிந்தர் ஸ்ரன், பென் வார்ஷியஸ், மனோஜ் திவாரி, அக்ஷதீப் நாத், பார்தீப் சாஹு, மயங்க் தகர், மன்சூர் தர். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விடுவிக்கப்பட்டோர்: மெக்கல்லம், கோரே ஆண்டர்சன், குயிண்டன் டி காக், மந்தீப் சிங், கிறிஸ் வோக்ஸ், சர்பராஸ் கான்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

விடுவிக்கப்பட்டோர்: மிச்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், டாம் கர்ரன், கேமரன் டெல்போர்ட், இஷாங் ஜக்கி, வினய் குமார், அபூர்வ் வாங்கடே, ஜாவன் சியர்லஸ். 

தில்லி டேர்டெவில்ஸ்

விடுவிக்கப்பட்டோர்: கெளதம் கம்பீர், ஜேஸன் ராய், ஜூனியர் தலா, லியம் பிளங்கெட், முகமது சமி, சயன் கோஷ், டேனியல் கிறிஸ்டியன், மேக்ஸ்வெல், குர்கீரத் சிங், நமன் ஓஜா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com