பாக். ஹாக்கி அணிக்கு விசா: இந்தியா முடிவு

ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடக்கவுள்ள ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க பாக். அணிக்கு விசா வழங்க


ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடக்கவுள்ள ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க பாக். அணிக்கு விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடுவதால் பாகிஸ்தானுடன் உறவு சீர்குலைந்துள்ளது. இதனால் கிரிக்கெட் இரு தரப்பு தொடர்களும் நடப்பதில்லை.அயல்நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே மோதுகின்றன.
இந்நிலையில் லக்னெளவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கு பாக். அணி தகுதி பெற்றிருந்தும், மத்திய அரசு விசா தரவில்லை பின்னர் மலேசிய அணி பங்கேற்றது. வரும் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 16 வரை புவனேசுவரத்தில் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் பாக். அணிக்கு விசா வழங்கப்ப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது என ஒடிசா விளையாட்டுத் துறை செயலாளர் விஷால் தேவ் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com