உலக ஜூனியர் பாட்மிண்டன்: அரையிறுதியில் லக்ஷயா சென்

உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளார்.
உலக ஜூனியர் பாட்மிண்டன்: அரையிறுதியில் லக்ஷயா சென்


உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளார்.
கனடாவின் மார்கம் நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஆசிய ஜூனியர் சாம்பியனும், இந்திய நட்சத்திர வீரருமான லக்ஷயா சென் சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மலேசியாவின் அடில் ஷோலே அலியை எதிர்கொண்டார். இதில் 21-8, 21-18 என்ற கேம் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார் சென்.
உலகின் மூன்றாம் நிலை வீரரான சென் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இரண்டாவது கேமில் மலேசிய வீரர் அடில் ஈடுகொடுக்க முயன்றாலும் தோல்வியுற்றார்.
அரையிறுதியில் தாய்லாந்து வீரர் குன்லவுட் விதித்சர்னை எதிர்கொள்கிறார் சென்.
இரட்டையர் காலிறுதியில் இந்திய இணை விஷ்ணு வர்தன்-கிருஷ்ண சாய் தோல்வியுற்றது.
ஹாங்காங் ஓபன்: ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் அரையிறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜப்பானின் கென்டோ மொமடோ 21-18, 16-21, 19-21 என்ற கேம் கணக்கில் தென்கொரிய வீரர் சன்வான் ஹோவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com