கோலியுடன் அமைதியை கடைபிடியுங்கள்: ஆஸி. வீரர்களுக்கு டுபிளெஸிஸ் அறிவுரை

இந்திய கேப்டன் விராட் கோலியுடன் அமைதியை கடைபிடியுங்கள் என ஆஸி. வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெஸிஸ் அறிவுரை கூறியுள்ளார்.
கோலியுடன் அமைதியை கடைபிடியுங்கள்: ஆஸி. வீரர்களுக்கு டுபிளெஸிஸ் அறிவுரை

இந்திய கேப்டன் விராட் கோலியுடன் அமைதியை கடைபிடியுங்கள் என ஆஸி. வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெஸிஸ் அறிவுரை கூறியுள்ளார்.
இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக ஆஸி. சென்றுள்ளது. முந்தைய தொடர்களில் கேப்டன் கோலி மற்றும் ஆஸி. வீரர்கள் இடையே ஆக்ரோஷமான போக்கால் மோதல் ஏற்படுவது வழக்கம். தற்போதைய தொடரில் எதிரணி வீரர்களை வெறுப்பேற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. கேப்டன் கோலியையும் நிதானமாக செயல்படும்படி பிசிசிஐ சிஓஏ கூறியுள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெஸிஸ் கூறியதாவது:
எங்கள் நாட்டில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்த போது, நாங்கள் கோலியை அமைதியாக வைத்திருக்க நாங்களும் அமைதியாக இருந்தோம். சர்வதேச ஆட்டங்களில் மோதலில் ஈடுபட விரும்பும் வீரர்களிடம் இதை தவிர்க்க வேண்டும். அப்போது நாங்கள் 2-1 என தொடரை வென்றோம். 3 ஆட்டங்களில் 286 ரன்களை எடுத்து கோலி சாதனை புரிந்தார். கோலியை பற்றி நாங்கள் எதுவுமே கூறக்கூடாது என முடிவு செய்தோம். கோலி இங்கிலாந்து, மே.இ.தீவுகளுடன் நடைபெற்ற தொடர்களில் அபாரமாக ஆடியுள்ளார்.
மிகச்சிறந்த வீரரரான கோலியை நாங்கள் அமைதியாக நடத்தினோம். அப்போதும் அவர் ரன்களை குவித்தார். எனவே ஆஸி. வீரர்கள் கோலியிடம் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
நிதானமாக செயல்பட விராட் கோலிக்கு சிஓஏ அறிவுரை
 ரசிகரை இந்தியாவை விட்டு வெளியேறு என கோலி கூறியதால் எழுந்த சர்ச்சையை அடுத்து, கேப்டன் கோலியை நிதானமாக நடக்குமாறு பிசிசிஐ சிஓஏ அறிவுறுத்தியுள்ளது.
விராட் கோலி ஆக்ரோஷமாக செயல்படுவதால், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கம். சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் இங்கிலாந்து, ஆஸி. பேட்ஸ்மேன்கள் ஆட்டம் பிடிக்கும் என கூறியிருந்தார். அதற்கு விடியோ பதிவிட்ட கோலி, நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகக் குழு தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. குழு உறுப்பினர் ஒருவர் கோலியிடம் பேசுகையில், கேப்டனாக உள்ளதால், பொது இடங்களில் நிதானமாகவும், செய்தியாளர்களிடம் மிதமாகவும் நடக்கும்படி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸி.யில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கச் சென்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com