டி20: ஆஸி.யை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

ஆஸி. அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


ஆஸி. அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஓரே ஒரு டி20 ஆட்டம் சனிக்கிழமை குயின்ஸ்லாந்தில் நடைபெற்றது. மழை பாதிப்பால் ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற ஆஸி. பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களை எடுத்தது. குயின்டன் டி காக் 22, டுபிளெஸிஸ் 27, ரீஸா 
ஹென்ட்ரிக்ஸ் 19 ரன்களை எடுத்தனர். ஆஸி. தரப்பில் நாதன் நைல், ஆன்ட்ரு டை ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ஆஸி. அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 87ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. மேக்ஸ்வெல் 38, கிறிஸ் லீன் 14 ரன்களை எடுத்தனர்,. தென்னாப்பிரிக்க தரப்பில் அன்டைல், கிறிஸ் மோரிஸ், நிகிடி தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com