துளிகள்...

துளிகள்...

பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் நடைபெற்ற 21 வயதுக்குட்பட்டோர் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தாக்கர் 2-3 என்ற செட் கணக்கில் ரஷிய வீரர் டெனிஸ் இவோனினிடம் தோல்வியுற்று வெண்கலப் பதக்கம் வென்றார். 


புதுதில்லி அடுத்த கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை நடைபெற்ற 21-ஆவது ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய கார்பந்தய சாம்பியன் போட்டியின் துவக்க நாளில் சென்னை வீரர் கார்த்திக் தரணி, மும்பை வீரர் நயன் சாட்டர்ஜி ஆகியோர் தங்கள் பந்தயங்களில் வென்றனர்.


ஜப்பானின் ஃபுயுஜிமியில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோர் ஆசிய சிறுமிகள் மல்யுத்த போட்டியில் இந்திய அணி 3 தங்கம், உள்பட 7 பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.


பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் சக வீரரான சாகேத் மைனேனியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com