நியூஸி.யுடன் டெஸ்ட்: இந்தியா ஏ அணி 467/8 டிக்ளேர்

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 467/8 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 467/8 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மெளன்ட்மெளன்கையில் நடைபெறுகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 467/8 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. (பிரித்வி ஷா 62, மயங்க் அகர்வால் 65, ஹனுமா விஹாரி 86, பார்த்திவ் படேல் 94, விஜய் சங்கர் 62, கிருஷ்ணப்பா கெளதம் 47). நியூஸி தரப்பில் பிளேர் டிக்னர் 4-80 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய நியூஸி அணி ஆட்ட நேர முடிவில் 51 ஓவர்களில் 1விக்கெட்டை இழந்து 170 ரன்களை எடுத்திருந்தது. ஹமிஷ் ரூதர்போர்ட் 100, வில் யங் 49, டிம் செய்பெர்ட் 13) ரன்களை எடுத்திருந்தனர். கிருஷணப்பா கெளதம் 1-33.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com