மகளிர் டி 20 உலகக் கோப்பை: ஆஸி. அணி படுதோல்வி

வலுவான ஆஸி. அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.
மகளிர் டி 20 உலகக் கோப்பை: ஆஸி. அணி படுதோல்வி


வலுவான ஆஸி. அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது, தனியா பாட்டியா. ஸ்மிருதி மந்தானா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். 
கார்டனர் பந்துவீச்சில் தனியா 2 ரன்களுக்கு வெளியேறினார்.
பின்னர் மந்தானா-ஜெமிமா இணை சேர்ந்து ரன்களை சேர்த்தது. ஆனால் ஜெமிமா 6 ரன்களோடு ஆட்டமிழந்தார். 
விக்கெட்டுகள் சரிவு: கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் தலா 3 சிக்ஸர், பவுண்டரியுடன் 27 பந்துகளில் 43 ரன்களை குவித்து டெலிஸா பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வேதா கிருஷ்ணமூர்த்தி 3, தயாளன் ஹேமலதா 1, அருந்ததி ரெட்டி 6, தீப்தி சர்மா 8 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். 
ஸ்மிருதி மந்தானா விஸ்வரூபம்: தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மந்தானா அபாராமாக ஆடி 3 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 55 பந்துகளில் 83 ரன்களை விளாசி ஷூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மந்தானா டி20இல் தனது 6-ஆவது அரை சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது. ராதா யாதவ் 1 ரன்னோடு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
எலைஸ் பெர்ரி: 3 விக்கெட்
ஆஸி. பந்துவீச்சாளர் எலைஸ் பெர்ரி இறுதிக் கட்டத்தில் அபாரமாக பந்துவீசி 16 ரன்கள் மட்டுமே தந்து 3 விக்கெட்டை சாய்த்தார்.
168 ரன்கள் இலக்கோடு ஆடிய ஆஸி. அணி தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 
பெத் மூனி 19, எல்ஸி வில்லானி 6, கார்டனர் 20, மெக் லேன்னிங் 10 என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ரேச்சல் ஹெய்ன்ஸ் 8, சோபி மோலினிக்ஸ் 9, டெலிஸா 1, ஷூட் 4, டய்லா 0 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். 
இறுதியில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 119 ரன்களை மட்டுமே ஆஸி. அணியால் எடுக்க முடிந்தது. இந்திய தரப்பில் அனுஜா பட்டீல் அபாரமாக பந்துவீசி 15 ரன்களை மட்டுமே தந்து 3 விக்கெட்டை சாய்த்தார். தீப்தி சர்மா, ராதா யாதவ், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டைவீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடம் பெற்றது.

அரையிறுதியில் இங்கிலாந்து, மே.இ.தீவுகள்
மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இங்கிலாந்து, மே.இ.தீவுகள் அணிகள் முன்னேறியுள்ளன.
குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்தும்-தென்னாப்பிரிக்க அணிகளும் வெள்ளிக்கிழமை இரவு மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 85 ரன்களை மட்டுமே தென்னாப்பிரிக்கா எடுத்தது. பின்னர் எளிதான வெற்றி இலக்கோடு ஆடிய இங்கிலாந்து 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 87 ரன்களை எடுத்தது. இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 
மே.இ.தீவுகள் அபாரம்: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகள் 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 187/5 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 17,4 ஓவர்களில் 104 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com