ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம்: பிசிசிஐ புறக்கணிப்பு

லாகூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கூட்டத்தை பிசிசிஐ புறக்கணித்தது.

லாகூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கூட்டத்தை பிசிசிஐ புறக்கணித்தது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் புதிய தலைவராக வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹாஸன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை தலைவராக இருந்த பாகிஸ்தான் வாரிய தலைவர் இஷான் மானியின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து நஜ்முல் தேர்வு செய்யப்பட்டார். அவர் வரும் 2020 வரை பதவியில் இருப்பார்.
பிசிசிஐ புறக்கணிப்பு:
இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, பாதுகாப்பு காரணங்களால் பிசிசிஐ தனது பிரதிநிதியை கூட்டத்துக்கு அனுப்பாமல் புறக்கணித்து விட்டது. ஏசிசி முழு உறுப்பினர்களான வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்பட 33 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிஇஓ டேவ் ரிச்சர்ட்ஸனும் கூட்டத்தில் பங்கேற்றார். 35 ஆண்டுக்கால ஏசிசி வரலாற்றில் பிசிசிஐ பங்கேற்காதது இதுவே முதன்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com