செய்திகள் சில வரிகளில்...

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனை நவோமி ஒஹுரா 21-19, 24-22 என்ற கேம் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இந்தோனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.


ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனை நவோமி ஒஹுரா 21-19, 24-22 என்ற கேம் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இந்தோனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கனை அதிகளவில் நடத்த வேண்டும்.  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியிலும் பகலிரவு ஆட்டங்களை நடத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை இந்தியா தவிர்த்தது ஏற்க முடியாது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் பிரியர்லீ கூறியுள்ளார்.

இந்தியாவுடன் டெஸ்ட், ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில் பந்து சேதப்படுத்திய புகாரால் ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் ஆகியோர் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகிகள் இறுதிக் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சிஏ ஆலோசனைக் கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது. 

சீன தைபேவில் நடைபெற்ற டபிள்யுடிஏ தைபே ஓபன் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-கர்மன் கெளர் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் 62-ஆவது தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டியில் 50.மீ ரைபிள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை அன்ஜும் மொட்கில் தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். இறுதிச் சுற்றில் 458.6 புள்ளிகளை குவித்து பட்டம் வென்றார் அவர்.

கிரேட்டர் நொய்டாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய கார்பந்த சாம்பியன் போட்டியில் யூரோ எல்ஜிபி பார்முலா 4 பட்டங்களை சென்னையின் கார்த்திக் தரணி-ராகுல் ரங்கசாமி இணை வென்றுள்ளது. நயன் சாட்டர்ஜி இரண்டாமிடத்தையும், அஸ்வின் தத்தா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்திய ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து ஏ அணி 458/9 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com