உயரமான ஆஸி. பெளலர்களை எதிர்கொள்ளத் தயார்: ரோஹித் சர்மா

உயரமான ஆஸி. பெளலர்களை எதிர்கொள்ளத் தயார்: ரோஹித் சர்மா

உயரமான ஆஸி. பெளலர்களை எதிர்கொள்ளத் தயார் என இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

உயரமான ஆஸி. பெளலர்களை எதிர்கொள்ளத் தயார் என இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை 21-ஆம் தேதி முதல் டி20 ஆட்டம் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுதொடர்பாக ரோஹித் சர்மா திங்கள்கிழமை கூறியதாவது:

உயரமான ஆஸி. பௌலர்களுக்கு சாதகமான சூழல் இருந்தாலும், அவர்களது சவாலை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் தயாராக உள்ளனர். பெர்த் மற்றும் பிரிஸ்பேன் மைதானங்களில் நிலவும் சூழல் நமக்கு சவாலாக தான் இருக்கும். இதை ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்வர். 

வேகப்பந்து வீச்சுக்கு உதவும் ஆடுகளங்களில் நாங்களும் ஆட தயாராக உள்ளோம். அவர்கள் அளவுக்கு இந்திய வீரர்கள் உயரம் இல்லை, என்றாலும் சவாலை எதிர்கொள்வோம். ஏற்கெனவே பெரும்பாலான வீரர்கள் ஆஸி. வந்து ஆடியுள்ளனர். எந்த சூழலையும் பயன்படுத்தி வெற்றி பெற முனைப்புடன் உள்ளோம். ஆஸி.யில் ஒரு அணியாக சிறப்பாக ஆடி வென்றால், நாம், 2019 உலகக் கோப்பையிலும் வெல்ல நம்பிக்கை பிறக்கும்.

அணியின் ஒவ்வொரு வீரரும், பலமான ஆஸி. அணியை எதிர்கொள்ள தன் பங்களிப்பை தர வேண்டும். அவர்கள் சொந்த மண்ணில் எப்போதுமே அபாயகரமான அணியாகும். நாம் ஓரே அணியாக இணைந்து செயல்பட வேண்டும். தனி நபர்கள் மட்டுமே சிறப்பாக ஆடினால் போதாது. அனைவரும் இணைந்து சவாலை ஏற்க வேண்டும். இங்கு நிலவும் சூழலை அறியவே முன்னரே வந்துவிட்டோம்.

பிரிஸ்பேன் மைதானம் பௌன்ஸ்க்கு உதவியாக இருக்கும். நமது அணியில் தரமான பெளலர்கள் உள்ளனர். மேலும் சுழற்பந்து வீச்சாளர்களையும் திட்டமிட்டு பயன்படுத்துவோம்.

எனது ஆட்டமுறைக்கு ஆஸி. பிட்ச்களின் வேகம், பெளன்ஸ் உதவும். பெர்த், பிரிஸ்பேனில் எனது ஆட்டத்தை நான் ஆட முடியும். 

"கோலி, ரோஹித் சர்மாவை எதிர்கொள்ள திட்டம் தயார்'

இந்தியாவின் விராட் கோலி, ரோஹித் சர்மாவை எதிர்கொள்ள திட்டம் தயாராக உள்ளதாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் நாதன் கெளல்டர் நைல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

அதிரடி பேட்ஸ்மேன்கள் கோலி, ரோஹித்தை அவுட்டாக்க நாங்கள் பல்வேறு உத்திகளை வகுத்துள்ளோம். இன்ஸ்விங்கர் அல்லது ஷார்ட் பால் வீசி அவர்களை சோதனைக்குள்ளாக்குவது போன்றவற்றை கடைபிடிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com