ஏடிபி பைனல்ஸ்: அலெக்சாண்டர் வெரேவ் சாம்பியன்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் இளம் வீரர் அலெக்சாண்டர் வெரேவ்.உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்ற ஆண்டு
ஏடிபி பைனல்ஸ்: அலெக்சாண்டர் வெரேவ் சாம்பியன்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் இளம் வீரர் அலெக்சாண்டர் வெரேவ்.உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்ற ஆண்டு இறுதியின் முக்கிய போட்டியான ஏடிபி பைனல்ஸ் லண்டனில் நடைபெற்றது. இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சும்- ஜெர்மன் வீரர் வெரேவும் மோதினர். இரண்டாவது முறையாக ஏடிபி பைனல்ஸில் ஆடும் வெரேவ் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். அரையிறுதியில் பெடரரை வென்ற உற்சாகத்துடன் களமிறங்கிய வெரேவின் அபாரமான ஆட்டத்துக்கு ஜோகோவிச்சால் ஈடுதர முடியவில்லை.

இறுதியில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதன்முறையாக ஏடிபி பைனல்ஸ் பட்டம் வென்றார் வெரேவ்.

வாழ்க்கையில் பெற்ற பெரிய வெற்றி: வெரேவ்

இது எனது வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய பட்டம் மற்றும் வெற்றியாகும். இந்த வெற்றியை வர்ணிக்க முடியாது. கடந்த சில மாதங்களாக ஜோகோவிச் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டென்னிஸ் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளோம். சில பட்டங்களை எனக்கு அவர் தந்துள்ளார். அதே போல் ஏடிபி பட்டத்தையும் அவர் தந்து விட்டார் என்றார் வெரேவ்.

ரவுண்ட் ராபின் சுற்றில் ஜோகோவிச் 6-4, 6-1 என வெரேவை வென்றிருந்த நிலையில் இறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

பெடரரின் 6 ஏடிபி பைனல்ஸ் வெற்றி சாதனையை சமன் செய்யும் நோக்கில் வந்த ஜோகோவிச் கனவு தகர்ந்து விட்டது.

ஜோகோவிச் கூறுகையில்: இந்த வெற்றி கண்டிப்பாக வெரேவுக்கு உரியது. ரவுண்ட் ராபின் சுற்றைக் காட்டிலும் தற்போது அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. இளம் வீரரான வெரேவ் மேலும் பல்வேறு சாதனைகளை புரிய வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் வெல்ல வாழ்த்துக்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com