செய்திகள்

மகளிர் டி20 உலகக் கோப்பை: 23-இல் அரையிறுதியில் இங்கிலாந்து-இந்தியா மோதல்

DIN

மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் ஒன்றில் வலுவான இங்கிலாந்து அணியை வரும் 23-ஆம் தேதி இந்திய அணி எதிர்கொள்கிறது.
மே.இ.தீவுகளில் நடைபெற்று வரும் இப்போட்டியில் குரூப் பி பிரிவில் இந்தியா தனது 4 ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அதே பிரிவில் இரண்டாம் இடத்துடன் ஆஸி. அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
குரூப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகள் முதலிடத்தையும், இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
22-இல் நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் மே.இ.தீவுகளும், மூன்று முறை சாம்பியன் ஆஸி.யும் மோதுகின்றன. 
23-ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.
கடந்த 2017-இல் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றதற்கு பழிதீர்க்க இந்தியாவுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
மே.இ.தீவுகள் வெற்றி: ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற குரூப் ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகள்-இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களையே எடுக்க முடிந்தது. மே.இ.தீவுகள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 6 விக்கெட்டுக்கு 50 ரன்களுடன் திணறிய போது, சோபியா டங்க்லி 35, அன்யா 29 ஆகியோர் ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் ஆட்டம் முடிய 3 பந்துகள் இருந்த நிலையில் த்ரில் வெற்றி பெற்றது. டின்ட்ரா டாட்டின் அபாரமா ஆடி 52 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில் 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு மே.இ.தீவுகள் 117 ரன்களை எடுத்து வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT