கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் அமைப்பில் ஷேன் வார்னே சேர்ப்பு!

கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளைப் பரிந்துரைக்கும் எம்சிசி உலக கிரிக்கெட் அமைப்பின் புதிய உறுப்பினராக...
கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் அமைப்பில் ஷேன் வார்னே சேர்ப்பு!

கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளைப் பரிந்துரைக்கும் எம்சிசி உலக கிரிக்கெட் அமைப்பின் புதிய உறுப்பினராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே சேர்க்கப்பட்டுள்ளார்.

எம்சிசி பரிந்துரைக்கும் விதிமுறைகள் ஐசிசி-யின் வழியாக அமல்படுத்தப்படுகின்றன. டிஆர்எஸ் விதிமுறைகள், பேட்டின் அளவுகள், பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகள் போன்றவை எம்சிசியின் அண்மைக்காலப் பரிந்துரைகள். 

மைக் கேட்டிங் தலைவராக உள்ள எம்சிசி அமைப்பின் புதிய உறுப்பினராக ஷேன் வார்னே சேர்க்கப்பட்டுள்ளார். சக ஆஸ்திரேலிய வீரரான ராட் மார்ஷ் ஆறு வருடக் காலத்துக்குப் பிறகு உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து தற்போது அந்த வாய்ப்பு ஷேன் வார்னேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com