விராட்கோலியின் டிஆர்எஸ் தேர்வு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் விமரிசனம்!

முதல் 12 ஓவர்களில் இரு டிஆர்எஸ் முடிவுகளில் தவறு செய்தார் கோலி. இதனால்...
விராட்கோலியின் டிஆர்எஸ் தேர்வு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் விமரிசனம்!

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக வீரர் ஹனுமா விஹாரி 56 ரன்களுடன் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 1 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 156 பந்துகளில் 86 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ஜடேஜா.

இங்கிலாந்து 40 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களை இங்கிலாந்து எடுத்திருந்தது. குக் 46, ஜோ ரூட் 29 ரன்களுடன் களத்தில் இருந்தனர். அந்த அணி 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது முதல் 12 ஓவர்களில் இரு டிஆர்எஸ் முடிவுகளில் தவறு செய்தார் கோலி. இதனால் இந்திய அணி கைவசம் ஒரு டிஆர்எஸ்ஸும் தற்போது இல்லை. இதை இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் விமரிசனம் செய்துள்ளார். அவர் ட்வீட் செய்ததாவது”

விராட் கோலி, உலகின் சிறந்த பேட்ஸ்மேன், உண்மை. கோலி, உலகளவில் டிஆர்எஸ் முறையை மோசமாகப் பயன்படுத்துபவர் என்று விமரிசனம் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com