சனிக்கிழமை 22 செப்டம்பர் 2018

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஆஸ்திரேலிய அணியில் ஐந்து புதிய வீரர்கள்!

DIN | Published: 11th September 2018 02:11 PM

 

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுடன் இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளென் மேக்ஸ்வெல், பீட்டர் ஹேண்ட்காம்ப், ஜோ பேர்ன்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன் ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் அணியில் ஆரோன் ஃபிஞ்ச், பீட்டர் சிடில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேஸில்வுட் ஆகிய இருவரும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. ஃபிஞ்ச், மைக்கேல் நசெர், மார்னஸ் லபுஸ்சான்,  பிரண்டன் டொக்கெட், டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆஸி. அணியில் இடம்பெற்றுள்ள ஐந்து புதிய வீரர்கள்.

துபை, அபுதாபியில் நடைபெறவுள்ள இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், அக்டோபர் 7 அன்று தொடங்கி 20-ம் தேதி முடிவடைகிறது. 

ஆஸ்திரேலிய அணி:

டிம் பெயின் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பிரண்டன் டொக்கெட், ஆரோன் ஃபிஞ்ச், டிராவிஸ் ஹெட், ஜான் ஹோலந்து, உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சான், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், மைக்கேல் நசெர், மேத்யூ ரென்ஷா, பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க். 

Tags : Australia Test squad uncapped players Pakistan Maxwell Handscomb

More from the section

ஆசிய கோப்பை: 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
சூப்பர் ஃபோர்: இந்தியா வெற்றி
டேபிள்டென்னிஸ்: இந்தியா சிறப்பிடம்
பாகிஸ்தான் அணி மீது மட்டுமே ஏன் கவனம் செலுத்துகின்றனர்? : திராவிட் வேதனை
ஊக்க மருந்து பயன்படுத்தியது பற்றிய புகாரில் ரஷிய அமைப்பு மீதான தடை நீக்கம்