வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

இந்திய பயிற்சியாளர்களால் ஒலிம்பிக் சாம்பியன்களை உருவாக்குவது கடினம்

DIN | Published: 12th September 2018 01:06 AM


இந்திய பயிற்சியாளர்களால் ஒலிம்பிக் சாம்பியன்களை உருவாக்குவது கடினம் என ஆசிய, காமன்வெல்த் போட்டி மல்யுத்த தங்க மங்கையான வினேஷ் போகட் கூறியுள்ளார்.
இந்திய விளையாட்டு ஆணையம் சாய் சார்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. டோக்கியோ ஒலிம்பிக் 2020-க்கு தயாராகி வரும் அவர் கூறியதாவது:
இந்திய பயிற்சியாளர்கள் தீர்வுகளை அளிக்கின்றனர். ஆனால் ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிக்கு இந்திய பயிற்சியாளர்களில் உரிய வெற்றிகளை அளிக்க முடியவில்லை. அதில் போட்டி பலமாக இருக்கும் என்பதால், நமக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
நாள்தோறும் என்ன செய்வது, விளையாட்டில் வேகம், திண்மை, பலம், தொழில்நுட்பம் போன்றவற்றை அவர்களால் வழங்க இயலும்.
50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் தங்கப் பதக்கம் வென்றார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல ஏதுவாக தான் தனிப்பட்ட பயிற்சியாளரை தேடி வருகின்றேன். ஹங்கேரி பயிற்சியாளர் வாலர் அகோ எனக்கு அளித்த பயிற்சி மிகுந்த பயனைத்தந்தது.
கடந்த 2016-ரியோ ஒலிம்பிக் தோல்வி எனக்கு பாடத்தை கற்றுத் தந்தது. கடினமா பயிற்சியால் பல முறை மல்யுத்தத்தில் இருந்து வெளியேறி விட முடிவு செய்தேன். ஆனால் எனது திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்காக இதை மாற்றிக் கொண்டேன்.
வரும் அக்டோபர் மாதம் 20 முதல் 28-ஆம் தேதி வரை புடாபெஸ்டில் நடக்கவுள்ள உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் பதக்கம் வெல்ல ஆவலாக உள்ளேன் என்றார் வினேஷ்.
 

More from the section

மகளிர் டி 20: 13 ரன்களில் இலங்கையை வென்றது இந்தியா
உலக ஜூனியர் மல்யுத்தம்: சாஜன் பன்வால் சாதனை
வீரருக்கு அறிவுரை: யுஎஸ் ஓபன் போட்டி நடுவர் சஸ்பெண்ட்
2030 ஒலிம்பிக்: இணைந்து விண்ணப்பிக்க தென்கொரியா-வடகொரியா முடிவு
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல், பார்சிலோனா வெற்றி