புதன்கிழமை 14 நவம்பர் 2018

கொங்கு கோப்பை: சென்னை கல்லூரி அணிகள் சிறப்பிடம்

DIN | Published: 12th September 2018 01:06 AM
கூடைப்பந்துப் போட்டியில் முதலிடம் வென்ற சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவக் கல்லூரி அணிக்கு சாம்பியன் கோப்பையை அளிக்கிறார் ஈரோடு வருமான வரித் துறை துணை ஆணையர


ஈரோடு அருகே உள்ள பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கொங்கு கோப்பைக்கான போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி அணிகள் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றுள்ளனர்.
மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையே 19 ஆவது கொங்கு கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், செப்டம்பர் 7 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2,200 மாணவ, மாணவிகளைக் கொண்ட 227 அணிகள் கலந்துகொண்டன.
இதில், கூடைப்பந்து ஆடவர் பிரிவில் சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம், மகளிர் பிரிவில் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவக் கல்லூரி, கைப்பந்து ஆடவர் பிரிவில் சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரி, மகளிர் பிரிவில் கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி, கபடி ஆடவர் பிரிவில் சென்னை டி.பி.ஜெயின் கல்லூரி, மகளிர் பிரிவில் கோவை கபடி அகாதெமி, பேட்மிண்டன் ஆடவர் மகளிர் பிரிவுகளில் சென்னை எஸ்.ஆர்.எம். தொழில்நுட்பக் கல்லூரி, மேசைப் பந்து ஆடவர் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், மகளிர் பிரிவில் விருதுநகர் வி.வி.வன்னிபெருமாள் மகளிர் கலைக் கல்லூரி ஆகிய அணிகள் முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றின.
கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளர் ஏ.வெங்கடாசலம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சர்வதேச முன்னாள் கபடி வீரரும், ஈரோடு வருமான வரித் துறை துணை ஆணையருமான ச.சுப்பிரமணியன் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு, கோப்பைகளை வழங்கினார்.
இவ்விழாவில், கல்லூரி முதல்வர் ந.குப்புசுவாமி, கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளைப் பொருளாளர் கிருஷ்ணன், பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் தேவராஜா, அறக்கட்டளை உறுப்பினர் இ.குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 

More from the section

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம்
விடைபெறுகிறார் வேய்ன் ரூனி
ஏடிபி பைனல்ஸ் ஜோகோவிச் அபார வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிராக வலுவான நிலையில் ஹைதராபாத் 523/7
ஐசிசி ஒரு நாள் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்