செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

செரீனா மோதல் தொடர்பாக கார்ட்டூன் வரைந்தவருக்கு கண்டனம்

DIN | Published: 12th September 2018 01:04 AM


யுஎஸ் ஓபன் போட்டியில் செரீனா-நடுவர் மோதல் தொடர்பாக கார்ட்டூன் வரைந்த ஆஸி. நாட்டைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட்டுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஒஸாகாவும், செரீனாவும் மோதினர். இதில் நடுவரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து செரீனா மோதலில் ஈடுபட்டார். நடுவர் ஒரு திருடர், பாலியல் ரீதியில் வீராங்கனைகளை நடத்துகிறார் எனசெரீனா புகார் கூறியிருந்தார். 
இந்நிலையில் ஆஸி. நாட்டைச் சேர்ந்த மார்க் நைட் என்ற கார்ட்டுனிஸ்ட் செரீனா பிரச்னை தொடர்பாக கார்ட்டூன் வரைந்தார்.
அதில் செரீனா தனது டென்னிஸ் மட்டையை கீழே போட்டு உடைப்பது போன்றும், நடுவர் ஒஸாகாவிடம் அவரை வெல்ல வைத்து விடுங்கன் என கூறுவதாகவும் வரையப்பட்டிருந்தது.
அது மெல்போர்ன் நகர நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹாரிபாட்டர் கதை ஆசிரியர் ரெளவ்லிங், கார்ட்டுன் இனரீதியில் பாகுபாட்டை வெளிப்படுத்துகிறது எனக் கண்டனம் தெரிவித்தார். இதற்கு மார்க் நைட் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

More from the section

விளையாட்டு விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்!
தோனி தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணி: தீபக் சஹார் அறிமுகம்!
தேசிய விளையாட்டு விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன!
நேர்த்தியான பெளலிங்: ரோஹித் சர்மா பாராட்டு
ரோஹித்-தவன் இணையின் அபார ஆட்டத்தில் புதிய சாதனைகள்