வியாழக்கிழமை 18 அக்டோபர் 2018

ஜப்பான் ஓபன்: இரண்டாம் சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த், பிரணாய்

DIN | Published: 12th September 2018 01:09 AM


ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டி இரண்டாம் சுற்றுக்கு இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, கே.ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை சயாகா டகாஷியை 21-17, 7-21, 21-13 என்ற ஆட்டக்கணக்கில் வீழ்த்தினார் சிந்து. 
ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் 21-13, 21-15 என சீனாவின் ஹுவாங்கை வென்றார். ஆசியப் போட்டி தங்க பதக்கம் வென்றவரான இந்தோனேஷிய வீரர் ஜோனாத்தன் கிறிஸ்டி 21-18, 21-17 என்ற ஆட்டக்கணக்கில் இந்தியாவின் பிரணாயிடம் அதிர்ச்சித் தோல்வியுற்றார். சமீர் வர்மா, ஜக்காரெட்டி ஆகியோர் ஒற்றையர் பிரிவில் தோல்வியுற்றனர். இரட்டையர் பிரிவில் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ரங்கிரெட்டி-அஸ்வினி இணை தோல்வியுற்றது.

More from the section

யூத் ஒலிம்பிக்: மும்முறை தாண்டுதலில் வெண்கலம் வென்றார் தமிழக வீரர் சித்திரைவேல்
டென்மார்க் ஓபன்: இரண்டாம் சுற்றில் ஸ்ரீகாந்த்
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: காலிறுதியில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்
புரோ கபடி லீக்: தமிழ்த் தலைவாஸ் தோல்வி
அதிரடி வீரர் எவின் லெவிஸ் விலகல்: மே.இ. தீவுகளுக்கு சிக்கல்