புதன்கிழமை 14 நவம்பர் 2018

நீதிபதி முத்கல் தலைமையில் துரோணச்சார்யா, தயான்சந்த் விருது தேர்வுக் குழு அமைப்பு

DIN | Published: 12th September 2018 01:04 AM


துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுக்குரியவர்களை தேர்வு செய்வதற்கான குழு முன்னாள் நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
11 உறுப்பினர்களை கொண்ட தேர்வு குழு நிகழாண்டு துரோணச்சார்யா, தயான்சந்த் விருதாளர்களை தேர்வு செய்யும். பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவில் ஜி.எஸ்.சாந்து (குத்துச்சண்டை), அஸ்வினி பொன்னப்பா (பாட்மிண்டன்), சமரேஷ் ஜங் (துப்பாக்கி சுடுதல்), ஏ.கே.பன்சால் (ஹாக்கி), சஞ்சீவா சிங் (வில்வித்தை), சாய் சிறப்பு இயக்குநர் ஒன்கார் கேடியா, விளையாட்டுத் துறை இணை செயலர் இந்தர் தமிஜா. மேலும் டார்கெட் ஒலிம்பிக் திட்ட சிஇஓ ராஜேஷ், 2 விளையாட்டு பத்திரிகையாளர்களும் குழுவிர் இடம் பெற்றுள்ளநர்.துரோணச்சார்யா விருது பயிற்சியாளர்கள் 4 ஆண்டுகளில் சிறப்பான செயல்பாடுகளுக்கு வழங்கப்படுகிறது. தயான்சந்த் வாழ்நாள் விருது சிறந்த வீரர்களுக்கு அவர்கள் விளையாடிய போதும், ஓய்வுக் காலத்திலும் விளையாட்டுத் துறைக்கு ஆற்றிய பணிக்காக வழங்கப்படுகிறது. ஆசியப் போட்டி நடைபெற்றதால், நிகழாண்டு விருது வழங்கும் விழா வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
 

More from the section

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம்
விடைபெறுகிறார் வேய்ன் ரூனி
ஏடிபி பைனல்ஸ் ஜோகோவிச் அபார வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிராக வலுவான நிலையில் ஹைதராபாத் 523/7
ஐசிசி ஒரு நாள் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்