வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

நேஷன்ஸ் லீக் கால்பந்து: இத்தாலியை வீழ்த்தியது போர்ச்சுகல்

DIN | Published: 12th September 2018 01:07 AM
கோலடித்த ஆன்ட்ரே சில்வா.


யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்றது.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் என்ற புதிய போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 பிரிவுகளாக நாடுகள் பிரிக்கப்பட்டு அதில் முதலிடம் பெறும் 4 அணிகள் வரும் 2019-இல் நடைபெறும் இறுதி லீக் ஆட்டத்தில் மோதும்.
இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நள்ளிரவு லிஸ்பனில் இத்தாலி-ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் இடையே ஆட்டம் நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த முனைந்ததால் எவரும் கோலடிக்கவில்லை. ஆட்டம் முடிய கடைசி நிமிட நேரத்தில் போர்ச்சுகல் வீரர் ஆன்ட்ரே சில்வா அடித்த ஓரே கோல் மூலம் அந்த அணி வென்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத நிலையிலும் போர்ச்சுகல் அணி சிறப்பாக விளையாடி வென்றது.
இத்தாலி தனது முதல் ஆட்டத்தில் போலந்துடன் டிரா கண்டது. இதனால் அந்த அணி 1 புள்ளியுடன் உள்ளது.


 

More from the section

சென்னையில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்த சுழற்பந்துவீச்சாளர்! (விடியோ இணைப்பு)
பாலிவுட் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறாரா விராட் கோலி? உண்மை நிலவரம் என்ன?
விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு கேல்ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு
ஜோகோவிச்சுடன் இணைந்து விளையாட ரோஜர் பெடரர் விருப்பம்
சீன ஓபன்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்