திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து போட்டி: வருமான வரி, விஜயா வங்கி அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி

DIN | Published: 13th September 2018 01:01 AM
அரையிறுதி ஆட்டத்தில் மோதிய சென்னை வருமான வரித் துறை, இந்தியன் வங்கி அணியின் வீரர்கள்.


கோவையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு சென்னை வருமான வரி, பெங்களூர் விஜயா வங்கி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
லீக், நாக் - அவுட் முறையில் நடத்தப்படும் நிலையில், லீக் ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சென்னை வருமான வரித் துறை அணி, சென்னை இந்தியன் வங்கி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் வருமான வரித் துறை அணி 66-64 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இதில் வருவான வரித் துறை அணி தரப்பில் வீரர்கள் ஜீவானந்தம் 21, அகிலன் 16, சிவபாலன் 15 ஆகியோர் அதிக புள்ளிகள் சேர்த்தனர். இந்தியன் வங்கி வீரர் பால தனிஸ்வர் அதிகபட்சமாக 25 புள்ளிகள் சேர்த்தார்.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பெங்களூரு விஜயா வங்கி அணி, தில்லி இந்தியன் ரயில்வே அணியை எதிர்த்து விளையாடியது. இதில், விஜயா வங்கி அணி 92 - 64 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய ரயில்வே அணியை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை நடைபெற உள்ள இறுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை வருமான வரித் துறை அணியும், பெங்களூரு விஜயா வங்கி அணியும் மோதுகின்றன. முன்னதாக மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணியும், இந்திய ரயில்வே அணியும் விளையாடுகின்றன.

 

 

More from the section

வங்கதேசம் வெற்றி
வியாபாரமாகி விட்ட விளையாட்டு விருதுகள்: அதிருப்தியில் வீரர்கள், பயிற்சியாளர்கள்
2022 ஆசிய, காமன்வெல்த் போட்டிகளுக்கு தொடர்ந்து நிதியுதவி
துளிகள்...
சென்னையில் ஏடிபி டென்னிஸ் போட்டியை மீண்டும் நடத்த நடவடிக்கை