செவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018

சாஃப் கோப்பை அரையிறுதி: பாகிஸ்தானை (3-1) சாய்த்தது இந்தியா

DIN | Published: 13th September 2018 12:40 AM


தெற்காசிய கோப்பை கால்பந்து (சாஃப்) போட்டி அரையிறுதியில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
வங்கதேச தலைநகர் டாக்காவில் சாஃப் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியா-பாக். அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 49, 69-ஆவது நிமிடத்தில் மான்வீர் கோலை அடித்தார். 84-ஆவது நிமிடத்தில் வீரர் சுமித் ஃபாஸி மூன்றாவது கோலை அடித்ததின் மூலம் 3-0 என இந்தியா முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் நடுவர் தலையிட்டு சமரசம் செய்தார். ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில் பாக். வீரர் ஹாசன் பஷீர் ஆறுதல் கோலை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மாலத்தீவு அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
 

More from the section

புதுச்சேரியில் முதன்முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி
ஏடிபி பைனல்ஸ்: நிஷிகோரியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார் பெடரர்
துளிகள்...
ஐபிஎல் முழு சீசனிலும் நியூஸிலாந்து வீரர்கள் பங்கேற்பர்
உலக மகளிர் செஸ்: ஹரிகா தோல்வி